School College Holiday: தொடர் கனமழை; நீலகிரி மாவட்டத்தில் 2 தாலுகா பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!
தீபாவளி விடுமுறை முடிந்து இன்று கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்படும் நிலையில், நீலகிரியில் 2 தாலுகாவுக்கு மழையால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 04, குன்னூர் (Nilgiris News): வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரமாக உள்ளது. அதேபோல, தென்கேரள கடலோரப்பகுதிகள், அதனையொட்டிய வளிமண்டல பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் மேற்குத்தொடர்ச்சி மலையில் இருக்கும் நீலகிரி (Nilgiris Rain) மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டு இருந்தது. கடந்த சில நாட்களாகவே அங்கு தொடர் மழை பெய்து வந்தது. Tiruppur Shocker: "ஐயா காப்பாத்துங்க" கிணத்துக்குள் கேட்ட அலறல் சத்தம்., நள்ளிரவில் பதறவைத்த சம்பவம்.!
பள்ளி-கல்லூரிகளுக்கு (School College Holiday) விடுமுறை:
இதனிடையே, நேற்றும்-இன்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் இன்று பள்ளி-கல்லூரி மாணவர்களின் நலன்கருதி, அம்மாவட்டத்தில் உள்ள நீலகிரி, குன்னூர் தாலுகாவில் செயல்பட்டு வரும் பள்ளிகள்-கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா உத்தரவிட்டு இருக்கிறார். விடுப்பு நாளை ஈடு செய்யும் வகையில், விடுமுறை நாளில் பள்ளிகள்-கல்லூரிகள் நடைபெறும். தேதி பின் அறிவிக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தீபாவளி விடுமுறை முடிந்து பலரும் 4 நாட்கள் கழித்து பணியிடங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு திரும்பியுள்ள நிலையில், நீலகிரியில் உள்ள 2 தாலுகாவுக்கு மட்டும் மழை காரணமாக 1 நாள் கூடுதல் விடுமுறை கிடைத்து இருக்கிறது.
(The above story first appeared on LatestLY on Nov 04, 2024 07:24 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

