Son Disturbed His Mother: செல்போன் கேட்டு தொந்தரவு செய்த மகன்; தூக்குப்போடுவது போல் நடித்த தாய்க்கு நேர்ந்த சோகம்..!

திருச்சியில் செல்போன் வாங்கி தர வேண்டும் என தொந்தரவு செய்த மகனிடம், தூக்குப்போடுவது போல நடித்த தாய் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Son Disturbed His Mother: செல்போன் கேட்டு தொந்தரவு செய்த மகன்; தூக்குப்போடுவது போல் நடித்த தாய்க்கு நேர்ந்த சோகம்..!
Death File Pic (Photo Credit: Pixabay)

ஜூன் 06, திருச்சி (Trichy News): திருச்சி மாவட்டத்தில் உள்ள மேலகல்கண்டார் கோட்டை செல்லாயி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த தம்பதி முருகேசன் (வயது 49)-பழனியம்மாள் (வயது 39). இவர்கள் பால் வியாபாரம் செய்து வருகின்றனர். இத்தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர்களது மகன் லெனின் பி.சி.ஏ படித்து வருகிறார். மகள் 10-ஆம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றுள்ளார். IND Vs IRE: மோசமான ஆட்டத்தால் தோல்வியை தழுவிய அயர்லாந்து; காரணம் என்ன..?

இந்நிலையில், லெனின் தனது தாயிடம் செல்போன் (Cell Phone) வாங்கி தர வேண்டும் என்று தொந்தரவு செய்து வந்துள்ளார். மேலும், வாங்கி தரவில்லை என்றால் வீட்டை விட்டு வெளியே சென்றுவிடுவேன் எனவும் மிரட்டி வந்தார். இதனால், தனது மகனை மிரட்ட வேண்டும் என்று, அவரது தாய் பழனியம்மாள் சேலையால் தூக்குப்போடுவது போல் நடித்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக சேலை அவரது கழுத்தை நெரித்து இறுக்கியது. உடனே, அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.

இதனையடுத்து, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுதொடர்பாக, பொன்மலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Jun 06, 2024 12:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).