Son-in-Law Murdered: மருமகனை திட்டமிட்டு கொலை செய்த பெண் வீட்டார்; மாமனார், மாமியார் உட்பட 8 பேர் கைது..!

ஓசூரில் மகளை காதல் திருமணம் செய்துகொண்ட மருமகனை கொலை செய்ய திட்டமிட்டு, கூலி படை அனுப்பி படுகொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Son-in-Law Murdered: மருமகனை திட்டமிட்டு கொலை செய்த பெண் வீட்டார்; மாமனார், மாமியார் உட்பட 8 பேர் கைது..!
Murder (Photo Credit: Pixabay)

ஜூலை 23, ஓசூர் (Krishnagiri News): ஆந்திர பிரதேச மாநிலம், நந்தியால் மாவட்டத்தை சேர்ந்த ஹசனய்யா என்பவர், பிரம்பீவி என்ற பெண்ணை கடந்த ஓராண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் (Love Marriage) செய்துகொண்டார். இவர்களின் காதலுக்கு பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இருப்பினும், மகளின் ஆசைக்கு ஏற்ப அவரை ஏற்றுக்கொண்டது போல நடித்து திருமணம் முடித்து வைத்துள்ளனர். பின்னர், அவர்களை மாமனார் வீட்டிலேயே தங்கியிருக்க செய்தனர். இதனையடுத்து, அவரை கொலை செய்ய பலமுறை முயற்சித்து வந்துள்ளனர். Heavy Rains In Junagadh: கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு; வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் பணிகள் தீவிரம்..!

இதனிடையே மகளுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இதனால் ஆத்திரம் அதிகரித்து, மருமகனை கொலை (Murder) செய்ய பல லட்சம் ரூபாய் செலவழித்து, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பத்தனப்பள்ளி பகுதியில் தங்கும் விடுதியை லீசுக்கு எடுத்து கொடுத்துள்ளனர். அதனை ஹசனய்யா நடத்தி வந்துள்ளார். விடுதி ஆரம்பித்த 4-வது நாளில், அவர் தங்கிருந்த அறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், ஹசனய்யாவின் மாமனார் காதர் வல்லி, மாமியார் பீரம்மா, சின்ன மாமியார் மாதேவி ஆகியோர் கொலை செய்ய திட்டமிட்டுள்ளது தெரியவந்தது. சீனிவாசலு என்ற ரவுடி தலைமையிலான கூலிப்படையை அனுப்பி, தங்கும் விடுதி தொடங்கிய நாள் முதல் 4 நாட்கள் தங்கி இருந்து ஹசனய்யாவை கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த கொலை வழக்கில் ஹசனய்யாவின் மாமனார், மாமியார் உட்பட மொத்தம் 8 பேரை காவல்துறையினர் ஆந்திராவில் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Jul 24, 2024 08:27 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).