மார்ச் 08, கன்னியாகுமரி (Kanyakumari News): குமரி மாவட்டம் கீரிப்பாறை அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி பூதப்பாண்டி பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 19-ஆம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடியும் மாணவி கிடைக்கவில்லை. இதையடுத்து பெற்றோர் பூதப்பாண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். விசாரணையில் மாணவியை ஆரல்வாய்மொழி பாரதிநகரை சேர்ந்த பிரகாஷ் (வயது 23) என்பவர் கடத்தி சென்றுள்ளது தெரிந்தது. இதனையடுத்து காவல்துறையினர் பிரகாஷ் இருக்கும் இடத்தை அறிந்துகொண்டனர். இந்நிலையில் பிரகாஷ் மற்றும் மாணவி இருவரும் திருப்பூரில் இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்து விட்டதை அறிந்த பிரகாஷின் பெற்றோர் அவருக்கு தகவல் தெரிவித்தனர். பிரகாஷ் மாணவியை அவரது வீட்டிற்கு முன் விட்டு தப்பிச்சென்றுள்ளார். Internet Apocalypse: நெருங்கிவரும் சூரியப்புயல்.. இணைய பேரழிவை எதிர்கொண்டு ஸ்தம்பிக்கப்போகும் உலகம் – நாசா அதிர்ச்சி தகவல்.!
மாணவி பலாத்காரம்: வீட்டிற்கு வந்த மகள் குறித்து பெற்றோர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, சிறுமியிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், "மாணவி கீரிப்பாறையிலுள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றபோது, அந்தப் பகுதியில் பிரகாஷ் வேலை பார்த்து வந்த நிலையில், சிறுமியுடன் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கத்தின் பேரில், இன்ஸ்டாகிராம் செயலி உதவியுடன் இருவரும் காதலித்து, பல இடங்களுக்கு சென்று இருக்கின்றனர். திருமணம் செய்துகொள்வதாக கூறி கடந்த 19ம் தேதி திருப்பூருக்கு மாணவியை கடத்தி சென்ற பிரகாஷ், அங்கு மாணவியை பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதன்பின் அவருக்கு பெற்றோர் தெரிவித்த தகவலால், கைதுக்கு பயந்து சிறுமியை வீட்டிற்கு அனுப்பி வைத்து தப்பி சென்றுள்ளார்" என்பது அம்பலமானது.
குற்றவாளிக்கு வலை: சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட தகவலை அறிந்த காவல் துறையினர், அவரை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். பரிசோதனையில், மாணவி பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து, வழக்கு நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதியப்பட்டது. பிரகாசை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.