College Girl Suicide: காதலருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவி விபரீத முடிவு; கம்பி எண்ணும் காதலன்..!
திருச்சியில் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 23, திருச்சி (Trichy News): திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் ராஜகோபால் நகரில் வசித்து வருபவர் கோவிந்தராஜன். இவரது மகள் ஜெய்ஸ்ரீ திருச்சியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். இவர் ஸ்ரீரங்கம் பகுதியில் வடக்கு சித்திரை வீதியில் வசித்து வரும் கிஷோர் (வயது 25) என்பவரை காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகின்றது. Instagram Love Affair: இன்ஸ்டாகிராம் காதலால் சோகம்; 2 குழந்தைகளை தவிக்கவிட்டு இளம்பெண் ஓட்டம்.., பரிதவிப்பில் கணவர்..!
இந்நிலையில், கடந்த 20-ஆம் தேதியன்று ஜெய்ஸ்ரீயும், கிஷோரும் தனது நண்பன் வீட்டு மாடியில் இருவரும் உரையாடிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையில் திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஜெய்ஸ்ரீ திடீரென மாடியில் இருந்து குதித்து தற்கொலை (Suicide By Jumping From The Floor) செய்துகொண்டுள்ளார்.
இதுதொடர்பாக ஸ்ரீரங்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், ஜெய்ஸ்ரீயின் தற்கொலைக்கு காரணமாக இருந்த அவரது காதலன் கிஷோரை கைது செய்தனர். மேலும், இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரது பெயர் ரவுடி பட்டியலில் உள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.
(The above story first appeared on LatestLY on Apr 23, 2024 12:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

