Theni Shocker: அனுதினமும் மனைவிக்கு போதையில் உறவுக்கு வற்புறுத்தி தொந்தரவு.. அந்த உறுப்பிலேயே மிதித்து, கழுத்தை நெரித்து கணவன் கொலை.!

அனுதினமும் மனைவியை போதையில் வற்புறுத்தி வந்த பெயிண்டர், சொந்த மனைவியால் அந்தரங்க உறுப்பில் மிதித்தே கொல்லப்பட்ட பயங்கரம் போடியில் நடந்துள்ளது.

Theni Shocker: அனுதினமும் மனைவிக்கு போதையில் உறவுக்கு வற்புறுத்தி தொந்தரவு.. அந்த உறுப்பிலேயே மிதித்து, கழுத்தை நெரித்து கணவன் கொலை.!
Couple Ramesh - KrishnaVeni (Photo Credit: X)

நவம்பர் 17, போடி (Theni Crime News): தேனி மாவட்டத்தில் உள்ள போடி, ஜீவா நகரில் வசித்து வருபவர் ரமேஷ் (வயது 47). மனைவி கிருஷ்ணவேணி (வயது 35). தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து 19 ஆண்டுகள் ஆகின்றன. இருவரின் அன்புக்கு அடையாளமாக மகன், மகள் என 2 குழந்தைகள் இருக்கின்றனர்.

பெயிண்டராக வேலை செய்துவந்த ரமேஷ், அடிக்கடி வேலை விஷயமாக கேரளா சென்றுவிடுவார். இதனிடையே கணவன் - மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று வீட்டில் இருந்த ரமேஷ், திடீரென தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

அவரை கிருஷ்ணவேணியின் உதவியுடன் மீட்ட குடும்பத்தினர், சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், ரமேஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். Va Varalam Va Movie: காத்திருப்புக்கு பதில் சொல்லப்போகும் பாலாஜி முருகதாஸ் - இசையமைப்பாளர் தேவா: வா வரலாம் வா படத்தின் அல்டிமேட் லெவல் சஸ்பென்ஸ் இதுதான்.! 

Crime File Picture (Photo Credit: PIxabay)

பிரேத பரிசோதனை முடிவில் ரமேஷின் உடலில் நகங்களால் கீறப்பட்டது, தோள்பட்டை காயம், மர்ம உறுப்பில் காயம், கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது அம்பலமானது. இதனையடுத்து, சந்தேக மரணமாக வழக்குப்பதிந்த காவல் துறையினர், கிருஷ்ணவேணியிடம் விசாரணை செய்தனர். அப்போது, ரமேஷின் கொலை மர்மம் விலகியது.

கிருஷ்ணவேணி காவல் துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில், "பெயிண்டராக வேலைபார்த்துவந்த ரமேஷ், மதுப்பழக்கத்திற்கும் அடிமையாக இருந்துள்ளார். இதனால் தினமும் போதையில் வீட்டிற்கு வந்து, சொந்த மனைவியை உடலுறவுக்கு வற்புறுத்தி தொந்தரவு செய்து இருக்கிறார். 2 குழந்தைகள் வளரும் பருவத்தில் உள்ள சூழலில், அதற்கு நான் மறுப்பு தெரிவித்து வந்தேன்.

சம்பவத்தன்றும் என்னை பாலியல் ரீதியாக வற்புறுத்தி தொல்லை செய்தார். அவரின் தொல்லை தாங்க இயலவில்லை. எனது விருப்பம் இன்றி உறவுகொள்ள முயற்சித்தால், ஆத்திரத்தில் அவரை தாக்கி கீழே தள்ளினேன். அப்போது உடலில் காயம் ஏற்பட்டது. ஆத்திரம் தீராமல் அவரின் அந்தரங்க உறுப்பில் மிதித்து, கழுத்தை நெரித்து கொலை செய்தேன்" என தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணவேணியின் வாக்குமூலத்தை பதிவு செய்த போடி நகர காவல் துறையினர், நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சிறையில் அடைத்தனர்.

குடி இன்னும் எததனை குடியை கெடுக்கப்போகிறதோ..

(The above story first appeared on LatestLY on Nov 17, 2023 05:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).