Women Suicide: கள்ளக்காதல் மோகத்தில் மனைவி, குழந்தைகளை மறந்த கணவன்.. உயிரைவிட்ட பாசக்கார மனைவி.. கண்ணீர் சோகம்.!

திருமணம் ஆன 4 ஆண்டுகளில் தம்பதிகளின் அன்புக்கு சாட்சியாக அழகிய பெண் குழந்தை ஒன்று இருக்கும் நிலையில், கணவன் பணியிடத்தில் கிடைத்த நட்பை கள்ளகாதலியாக்கி அதற்கு மனைவியின் உயிரை விலையாக கொடுத்த துயரம் நடந்துள்ளது.

Women Suicide: கள்ளக்காதல் மோகத்தில் மனைவி, குழந்தைகளை மறந்த கணவன்.. உயிரைவிட்ட பாசக்கார மனைவி.. கண்ணீர் சோகம்.!
Victim Bhavani | Death File Pic

மே 16, ஒண்டிக்குப்பம் (Thiruvallur News): திருவள்ளூர் (Thiruvallur Crime News) மாவட்டத்தில் உள்ள ஒண்டிக்குப்பம், வரலட்சுமி நகரில் வசித்து வருபவர் பிரசாந்த் (வயது 28). ஓரகடத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். அதே பகுதியில் உள்ள குப்புசாமி நகர், சாயிபாபா கோவில் தெருவில் வசித்து வருபவர் பவானி (வயது 24).

இந்த தம்பதிகளுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது. இவர்களின் இல்லற வாழ்க்கைக்கு அத்தாட்சியாக பிரியா ஸ்ரீ என்ற ஒன்றரை வயது குழந்தையும் இருக்கிறார். இதற்கிடையில், பிரசாந்துக்கு தனது நிறுவனத்தில் வேலை பார்த்துவரும் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் இருவரும் நெருங்கி பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விஷயம் பவானிக்கு தெரியவரவே, அவர் தனது கணவரை கண்டித்துள்ளார். இது குடும்பத்திற்குள் பிரச்சனையை ஏற்படுத்தவே, இருவரும் அவ்வப்போது வாக்குவாதம் செய்து வந்துள்ளனர். Ministry of Labour & Employment: இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் 17.31 லட்சம் புதிய தொழிலாளர்கள் சேர்ப்பு; மத்திய அரசு அறிவிப்பு.!

இந்நிலையில், கடந்த சில நாட்களாக பிரசாந்த் மனைவி மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு, கள்ளகாதலியின் வீட்டிற்கு சென்று குடும்பம் நடத்தியதாக தெரியவருகிறது. இதனால் மனமுடைந்துபோன பவானி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

எதற்ச்சையாக பவானியின் வீட்டிற்கு வந்த பக்கத்து வீட்டு பெண்மணி, பவானியின் முடிவை கண்டு அலறியுள்ளார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, அவர் உயிரிழந்தது உறுதி செயப்பட்டது. இந்த விஷயம் குறித்து பவானியின் தாயார் உஷா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

(The above story first appeared on LatestLY on May 16, 2023 08:54 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).