Lorry Collides With Bike: லாரி மோதி 3 வாலிபர்கள் உயிரிழப்பு; சுற்றுலா சென்றுவிட்டு வீடு திரும்பும்போது நேர்ந்த சோகம்..!

தரங்கம்பாடி-கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர்.

Lorry Collides With Bike: லாரி மோதி 3 வாலிபர்கள் உயிரிழப்பு; சுற்றுலா சென்றுவிட்டு வீடு திரும்பும்போது நேர்ந்த சோகம்..!
Tharangambadi Accident (Photo Credit: @Sriramrpckanna1 X)

மே 02, தரங்கம்பாடி (Mayiladuthurai News): கடலூர் மாவட்டத்தில் உள்ள பட்டான் குப்பத்தை சேர்ந்த இளைஞர்கள் ஹரி, சச்சின் மற்றும் ஆகாஷ். இவர்கள் மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்காலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அதன்பின்னர், அங்கிருந்து இன்று காலை வீட்டிற்கு வந்துக்கொண்டிருந்துள்ளனர். Nose Stud Stuck In The Lung Remove: பெண் நுரையீரலில் சிக்கியிருந்த மூக்குத்தி; 12 ஆண்டுகால அவதிக்கு விடுதலை அளித்த மருத்துவர்கள்..!

இந்நிலையில், தரங்கம்பாடி-கடலூர் தேசிய நெடுஞ்சாலை (National Highway) பகுதியில் தரங்கம்பாடி அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது, இவர்கள் சென்ற இருசக்கர வாகனம் அதிவேகமாக மோதி விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் ஹரி, சச்சின், ஆகாஷ் ஆகியோர் மூவரும் சாலையில் தூக்கி வீசி எறியப்பட்டனர். அப்போது, சாலையில் வந்த லாரி ஒன்று இவர்கள் 3 பேர் மீதும் ஏறியது. இதில் 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்த வந்த பொறையார் காவல்துறையினர் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக பொறையார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர்கள் 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். மேலும், இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் தப்பி ஓடியுள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பியோடியுள்ள லாரி ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

(The above story first appeared on LatestLY on May 02, 2024 06:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).