ஜனவரி 23, நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழக்கோடன்பட்டி (Tirunelveli) கிராமத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி. இவரின் மகள் கிறிஸ்டிலாமேரி. 19 வயதாகும் மேரிக்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு, உறவினர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் (Engagement) நடைபெற்று முடிந்துள்ளது. இவருக்கு ஒன்றாம் தேதி திருமணம் (Marriage) நடைபெற இருந்தது.

டாடி லிட்டில் பிரின்ஸிசாக (Dad Little Princess) வீட்டில் எந்த வேலைகளையும் கவனிக்காமல் எப்போதும் செல்போனை பார்ப்பதையே வாடிக்கையாக வைத்துள்ளார். இந்த நிலையில், மேரியின் தாயார் உனக்கு விரைவில் திருமணமாக உள்ளது. Erode Bypoll DMDK: “நாங்கதான் வெற்றி பெறுவோம்”.. ஈரோடு இடைத்தேர்தலில் தனித்து களமிறங்குறது தேமுதிக – பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி.. சூடேறும் அரசியல்களம்..!

ஆகையால் சமைப்பதற்கு கற்றுக்கொள் என்று மகளை (Mother Advice to Study Cooking) சமையல் கற்றுக்கொள்ள அறிவுறுத்தி இருக்கிறார். மேரி அதனை கண்டுகொள்ளாத தால் சம்பவத்தன்று தாயார் சற்று கடுமையாக கண்டித்து வாக்குவாதம் செய்துள்ளார்.

இதனால் மனதுடைந்து போன மேரி, தற்கொலை செய்ய முடிவெடுத்து பூச்சி (Suicide Drinks Pesticide Poison) மருந்தை குடித்ததாக தெரியவருகிறது. மகள் வாயில் நுரை தள்ளி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேரி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த தற்கொலை குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்றுள்ள இளம் தலைமுறை எதற்கெடுத்தாலும் தற்கொலை என்றும் முடிவை எடுத்து வருவதால் பெற்றோர்கள் அவர்களை கண்டிக்கவும் இயலாமல் தவிர்த்து வருகின்றனர்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 23, 2023 08:45 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).