Tirunelveli Child: சிறுவனின் தலையில் சிக்கிக்கொண்ட பாத்திரம்; செல்போனை கையில் கொடுத்து திசைதிருப்பி வெற்றிகண்ட அதிகாரிகள்.!
நம் வீட்டில் இருக்கும் குட்டீசுகள் செய்யும் ரகளைகள் எப்போதும் வரவேற்பை பெறும். ஆனால், சிறிய அளவிலான விளையாட்டு செயல் வினையத்திலும் கொண்டு சேர்க்கும்.
ஆகஸ்ட் 02, திருநெல்வேலி (Tirunelveli News): திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் தலையில் சிறிய அளவிலான பாத்திரம் சிக்கிக்கொண்டது. சிறுவன் விளையாட்டுத்தனமாக தனது தலையில் பாத்திரத்தை மாட்டிக்கொண்டு அழுதுள்ளார்.
இதனால் பதறிப்போன பெற்றோர் பாத்திரத்தை எடுக்க முயற்சித்தும் பலனில்லை. இதனையடுத்து, நெல்லை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Indian American: ஹிந்தியில் பேசியதால் வேலையை இழந்த இந்தியர்; அமெரிக்காவில் 78 வயதில் இந்தியருக்கு நடந்தது என்ன?.. விபரம் இதோ.!
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு, முதலில் அவனின் கையில் வீடியோ வைத்து கொடுத்து அமைதிப்படுத்தியுள்ளனர். பின்னர் கட்டிங் பிளேடு உதவியுடன் மெதுவாக பாத்திரத்தை வெட்ட தொடங்கினர்.
சிறுவன் செல்போன் பார்ப்பதில் மும்மரமானதால், அதிகாரிகள் இலாவகமாக பாத்திரத்தை வெட்டி சிறுவனின் தலையில் இருந்து அதனை அகற்றினர்.
(The above story first appeared on LatestLY on Aug 02, 2023 08:23 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

