Accuse Thangaraj | Theatre Screen Visual File Pic (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 11, ரெட்டியார்பட்டி (Tirunelveli News): திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்பட்டி, இட்டேரி கேப்ரியல் நகரில் வசித்து வருபவர் தமிழரசன் (வயது 30). இவர் இராணுவ வீரர் ஆவார். தமிழரசனின் மனைவி முத்துமாரி (வயது 26). கடந்த 7ம் தேதி முத்துமாரி வீட்டில் தனியாக இருந்த நிலையில்,அங்கு வ்வந்த தமிழரசனின் தந்தை தங்கராஜுக்கும் இடையே தகராறு நடந்துள்ளது.

இருவருக்கும் இடையே ஏற்கனவே நிலம் வாங்கியது தொடர்பாக தகராறு இருந்ததாக கூறப்படும் நிலையில், சம்பவத்தன்று ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த தங்கராஜ், முத்துமாரியை கடப்பாரை கொண்டு தாக்கியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்தவர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் 8ம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தங்கராஜ் கைது செய்யப்படும் வரையில் முத்துமாரியின் உடலை பெறோம் என போராட்டம் நடத்த, காவல் துறையினரும் 2 நாட்களாக தீவிரமாக தங்கராஜை தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவரின் வாக்குமூலமாக பல பரபரப்பு தகவல் வெளியாகின. Udhayanidhi Stalin Speech: ஐ.பி.எல் 2023-க்கு டிக்கெட் வாங்கி கொடுங்க; முன்னாள் அமைச்சரின் கோரிக்கையும், உதயநிதியின் பதிலும்.. சிரிப்பலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை.!

அதாவது, "தமிழரசன் எனது பெயரில் பணம் அனுப்பிவிட்டு இட்டேரி பகுதியில் 12 சென்ட் நிலத்தை முத்துமாரியின் பெயருக்கு வாங்க விருப்பம் தெரிவித்தார். ஆனால், நான் நிலத்தை எனது பெயருக்கு வாங்கினேன். விடுமுறையில் ஊருக்கு வந்த மகனிடம் பெயர் மாற்றி வாங்கியது குறித்து முத்துமாரி மகனிடம் கூறினார். இதனால் மகனுக்கும் - எனக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் நடந்தது.

சம்பவ நாளில் வீட்டில் இருந்த முத்துமாரியிடம் நிலம் தொடர்பாக மகனை ஏன் தூண்டி விடுகிறாய்? என கேட்டேன். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கடப்பாரை கொண்டு முத்துமாரியை தாக்கவே, படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்கு பின் உயிரிழந்தார். காவல் துறையினர் என்னை தேடுவார்கள் என அறிந்து, மருமகளின் இருசக்கர வாகனத்தை எடுத்து தப்பி சென்றேன்.

நான் காவல் துறையினரிடம் சிக்காமல் இருக்க இரயில் நிலையம், பேருந்து நிலையம் என சுற்றி வந்தேன். இறுதியில் காவல் துறையினர் மருமகளின் வாகன பதிவெண் கொண்டு விசாரித்து வரும்போது, திரையரங்கில் படம் பார்த்துக்கொண்டு இருக்கும்போது கைது செய்யப்பட்டேன்" என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கராஜ் கைது செய்யப்பட்ட பின் சிறையில் அடைக்கப்பட்டார்.