Tirupattur Accident: பழுதாகி நின்ற வேனின் மீது லாரி மோதி பயங்கர விபத்து; 7 பெண்கள் பரிதாப பலி.. அதிகாலையிலேயே தமிழ்நாட்டில் சோகம்.!
வாகனங்களில் மிதவேகம் மிகநன்று; அதிகாலையில் வாகனங்களை இயக்கினால் கவனமுடன் செயல்பட வேண்டும். உறக்கத்தில் வாகனங்களை இயக்கக்கூடாது என பல விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அலட்சியத்தால் அப்பாவி உயிர்கள் பலியாகின்றன.
செப்டம்பர் 11 , நாட்றம்பள்ளி (Tirupattur News): திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்றம்பள்ளி, சண்டியூர் பகுதியில் சாலையோரம் வேன் நிறுத்தப்பட்டு இருந்துள்ளது. வேன் மூலமாக சுற்றுலாவுக்கு வந்த வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட் பகுதியை சேர்ந்தவர்களின் வாகனம், பழுதாகிய காரணத்தால் சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று அதிகாலை ஊர் திரும்பிய நேரத்தில், 2 வேனில் பயணித்தவர்களில் (Tirupattur Road Accident 7 Women Died) ஒரு வேனின் சக்கரம் பழுதாகியதால், அதனை நீக்கும் பணியில் ஓட்டுநர் ஈடுபட்டுள்ளார். பயணிகள் வேனிலும், வேனின் முன்புறத்திலும் இருந்துள்ளனர். Tiruppur Crime: பெற்றோரை அவதூறாக பேசியதால் கொடூரம்; 15 வயது சிறுவன் வெறிச்செயல்..!
அப்போது, பின்னால் வந்த லாரி வேனின் மீது பயங்கரமாக மோதி ஏற்பட்ட விபத்தில், வேனுக்கு முன்புறம் அமர்ந்திருந்த 7 பெண்கள் மீது வாகனம் பாய்ந்துள்ளது. நொடியில் நடந்த விபத்தில் 7 பெண்களும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
3 பேரின் உடல் வாணியம்பாடி மருத்துவமனைக்கும், 4 பேரின் உடல் திருப்பத்தூர் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டது. அங்கு மருத்துவர்கள் பெண்களின் உயிரிழப்பை உறுதி செய்தனர். இதனைதவிர்த்து, 7 பேர் பலியாகி இருக்கின்றனர்.
அதிகாலையிலேயே நடந்த விபத்து மக்களை சோகத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்த விபத்து தொடர்பாக நாட்றம்பள்ளி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
(The above story first appeared on LatestLY on Sep 11, 2023 08:26 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

