Marriage Trap Women Arrested: வயதான செல்வந்தர்கள் தான் டார்கெட்.. திருமணம் செய்து சொத்தை அபகரிக்க கொலை முயற்சி.. 35 வயது இளம்பெண் அதிர்ச்சி தகவல்.!
சமூகத்தில் நல்ல அந்தஸ்தோடு வசித்து வந்த செல்வந்தர்களை குறிவைத்து, அவர்களின் சொத்துக்களை அபகரிக்க கொலை முயற்சி வரை சென்ற பெண்ணின் பரபரப்பு செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 3 நபர்களை ஏமாற்றிய இளம்பெண்ணிடம் விசாரிக்கையில் வெளியான பரபரப்பு தகவலை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
பிப்ரவரி 02, குன்னத்தூர்குறிச்சி: திருப்பூர் (Tiruppur) மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர்குறிச்சி, தோட்டத்துப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணி (வயது 52). இவர் விவசாயி ஆவார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, திண்டுக்கல்லை (Dindigul) சேர்ந்த தேவி (வயது 35) என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். சுப்பிரமணியன் தாயாருக்கும் - தேவிக்கும் இடையே ஏற்பட்ட சண்டையால், கணவரை பிரிந்த தேவி அக்காவின் வீட்டில் சென்று இருந்துள்ளார்.
கணவரை தொடர்பு கொண்ட தேவி, திண்டுக்கல்லில் நாம் சேர்ந்து வாழாலாம் என சுப்பிரமணியை அழைத்துள்ளார். அவர் தனது தாயாரை பிரிந்து வர மறுப்பு தெரிவித்து இருக்கிறார். இந்நிலையில், கடந்த 15ம் தேதியில் சுப்பிரமணிக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், அவரின் வலது கால்களில் தேவி ஊசியை செலுத்தியுள்ளார். அதன்பின்னரும் உடல்நலம் குணமாகவில்லை.
இதனால் சுப்பிரமணி தனியார் மருத்துவமனையில் (Private Hospital) சிகிச்சைக்கு சேர்ந்தபோது எடுக்கப்பட்ட இரத்த பரிசோதனையில், அவரின் இரத்தத்தில் பூச்சி (Poison) மருந்து கலந்தது அம்பலமானது. உண்மையை உணர்ந்த சுப்பிரமணி, மனைவியின் மீது குன்னத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் நடத்திய விசரணையில், சுப்பிரமணிக்கு சொந்தமாக இருந்த ரூ.60 இலட்சம் மதிப்புள்ள நிலத்தை (Land Occupied Attempt) அபகரிக்க கொலை முயற்சி நடந்தது அம்பலமானது. Hosur Violence: எருதுவிடும் திருவிழாவுக்கு அனுமதி கேட்டு கிருஷ்ணகிரி – ஓசூர் சாலை முடக்கம்.. 200 பேர் கைது., காவல்துறை குவிப்பு..!
தனக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு தான் தேடப்படுவதை அறிந்த தேவி தலைமறைவாகவே, தனிப்படை காவல் துறையினர் அவரை தேடி வருகின்றனர். அவருக்கு விஷ ஊசி வாங்கி கொடுத்தது யார்? என்ற விசாரணை நடத்தினர். தேவியை வரன்பர்த்து திருமணம் செய்ய உதவியாக இருந்த புரோக்கரிடமும் விசாரணை நடந்தது. இறுதியாக நாமக்கல்லில் பதுங்கியிருந்த தேவி கைது செய்யப்பட்டு விசாரணைக்குள்ளாக்கப்பட்டார்.
இந்த விசாரணையில், தேவிக்கு முன்னதாகவே 2 பேரோடு திருமணம் நடைபெற்று முடிந்தது, 3-வதாக சுப்பிரமணியை திருமணம் செய்துகொண்டு, அவரின் சொத்துக்களை அபகரிக்க நினைத்து விஷ ஊசி செலுத்தியதும் உறுதியானது. நாமக்கல்லில் செல்வந்தர்களுள் ஒருவராக வசித்து வந்த ராமன் என்பவர் மனைவியை விவாகரத்து (Women Trap Separated Businessman Cheating Name Of Marriage) செய்து தனியாக வசித்துவந்த நிலையில், அவரின் சொத்துக்களை தன்வசப்படுத்தி தேவி அவரோடு குடும்பம் நடத்தி இருக்கிறார். அப்போதுதான் கைதும் செய்யப்பட்டுள்ளார்.
(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் பிப்ரவரி 02, 2023 07:21 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).
(The above story first appeared on LatestLY on Feb 02, 2023 07:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

