Tiruppur Crime: பெற்றோரை அவதூறாக பேசியதால் கொடூரம்; 15 வயது சிறுவன் வெறிச்செயல்..!

தன்கண்முன்னே பெற்றோரை அவதூறாக பேசிய இளைஞரை, 15 வயது சிறுவன் கழுத்தறுத்து கொலை செய்த பயங்கரம் வேலாயுதம்பாளையம் பகுதியை அதிரவைத்துள்ளது.

Crime File Pic (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 10, வேலாயுதம்பாளையம் (Tiruppur News): திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 32). இதே பகுதியில் வசித்து வரும் தம்பதிக்கு மகன் இருக்கின்றார். அந்த மகன் அங்குள்ள பள்ளியில் 10 வகுப்பு பயின்று வருகிறார்.

யுவராஜுக்கும் - 10ம் வகுப்பு மாணவனின் தந்தைக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று நடந்த தகராறில், யுவராஜுக்கும் - இளைஞனின் தந்தைக்கும் வாக்குவாதம் அதிகரித்துள்ளது.

இதனால் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற யுவராஜ், சிறுவனின் முன்பே அவரின் தாய்-தந்தை ஆகியோரை கடுமையாக வசைபாடி இருக்கிறார். இது யுவராஜுக்கு கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. Chandrayaan: இரட்டை அதிர்வெண் செயற்கை துளை ரேடார் கருவியால் எடுக்கப்பட்ட போட்டோவை வெளியிட்டது இஸ்ரோ.. விபரம் உள்ளே.!

இதுதொடர்பான கடும் மனஉளைச்சலில் இருந்த சிறுவன், சம்பவத்தன்று வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்த யுவராஜை 15 வயது சிறுவன் கழுத்தறுத்து கொலை செய்துள்ளார்.

அக்கம் பக்கத்தினர் யுவராஜின் நிலையை கண்டு பின் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், யுவராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, சிறுவன் திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் உண்மையை கூறி சரணடைந்தார். அவரிடம் நடந்த விசாரணையில், பெற்றோர் சண்டையில் சிறுவன் ஆத்திரப்பட்டு கொலையை அரங்கேற்றியதை கண்டறிந்து கைது செய்துள்ளனர். சிறுவன் தற்போது சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement