Husband Murder: கள்ளகாதலுக்காக கணவரை பலிகொடுத்த பெண்.. மது ஊற்றி கொன்று தூக்கிய பரிதாபம்.. தவிக்கும் 2 பெண் குழந்தைகள்.!

டிசம்பர் 30, திருவண்ணாமலை: கள்ளக்காதலனை வைத்து பெண்மணி தனது கணவரை கொலை செய்து (Husband Killed Wife Affair Man) தலைமறைவான நிலையில், கிணற்றில் இருந்து கணவரின் சடலம் மீட்கப்பட்ட துயரம் நடந்துள்ளது. 2 பெண் குழந்தைகள் இருக்க, தன்னை அன்போடு பார்த்த கணவனை உல்லாசத்திற்காக மறந்து பெண் எடுத்த விபரீத முடிவால் 2 குழந்தைகளின் மனது பெருமளவு பாதிக்கப்பட்டு இருக்கும் சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி, கடுக்கனூர் (Arani, Tiruvannamalai) கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமிகாந்த். இவரின் மனைவி ராஜேஸ்வரி. தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த டிசம்பர் 23ம் தேதி லட்சுமிகாந்த் வீட்டை விட்டு வெளியேறி சென்றவர் திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் காணாத நிலையில், கடந்த 24ம் தேதி விவசாய கிணற்றில் சடலமாக மிதந்தார். இந்த விஷயம் தொடர்பாக பெரணமல்லூர் காவல் துறையினருக்கு தகவலை கிடைக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் லட்சுமிகாந்தின் உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், லட்சுமிகாந்தின் மனைவி ராஜேஸ்வரியிடம் தீவிர விசாரணை நடத்தினர். முதலில் கணவரின் மரணம் தொடர்பான விவகாரத்தில் மழுப்பல் பதில் அளித்த ராஜேஸ்வரி, கிடுக்குபிடி விசாரணைக்கு பின்னர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். செய்யாறு சிப்காட் தொழிற்சாலையில் ராஜேஸ்வரி வேலைக்கு சென்று இருக்கிறார். அப்போது, வெம்பாக்கம் பகுதியை சேர்ந்த உதயசூரியன் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டு, அப்பழக்கம் பின்னாளில் கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. Robbery Thief: வருமான வரித்துறை அதிகாரியாக நடித்து, கோவாவில் அழகிகளோடு உல்லாசம்.. தமிழ்நாடு காவல்துறையிடம் சரணடைந்த குற்றவாளிகள்.!  

இதனால் இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து தங்களின் உல்லாச வாழ்க்கையை தொடர்ந்து வந்துள்ளனர். பணிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தபின்னரும் ராஜேஸ்வரி கள்ளக்காதலன் உதயசூரியனோடு பேசி வந்திருக்கிறார். இவ்விவகாரம் லட்சுமிகாந்துக்கு தெரியவந்ததால் மனைவியை அவர் கடுமையாக கண்டித்து இருக்கிறார். இந்த தகவலை ராஜேஸ்வரி தனது கள்ளக்காதலன் உதயசூரியனிடம் தெரிவிக்க, அவரின் யோசனைப்படி லட்சுமிகாந்த்தை தீர்த்துக்கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, உதயசூரியன் மற்றும் வெம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த உறவினர் பாண்டியன் (வயது 23) ஆகியோர் கடந்த 23ம் தேதியில் லட்சுமிகாந்த்தை போனில் தொடர்பு கொண்டு மதுபானம் அருந்த அழைத்துள்ளனர். மதுபோதையில் உதயசூரியன், பாண்டியன் ஆகியோர் சேர்ந்து லட்சுமிகாந்தன் கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை விநாயகம் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் வீசிவிட்டு சென்றுள்ளனர். அதன்பின்னர் ராஜேஸ்வரி, உதயசூரியன் மற்றும் பாண்டியன் தலைமறைவாகியுள்ளனர் என்பது உறுதியானது.

இவர்கள் மூன்று பேரையும் காவல் துறையினர் தேடிவந்த நிலையில், பெரணமல்லூர் பேருந்து நிறுத்தம் அருகே அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணையில் மேற்கூறிய தகவல்கள் அனைத்தும் அம்பலமானது. திருமணம் முடிந்து 2 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்மணி கள்ளகாதலுக்காக தன்னை அன்போடு பார்த்துவந்த கணவரை பலிகொடுத்து சிறையில் கம்பி எண்ணும் துயரத்தில் ஒன்றும் அறியாத பிஞ்சுகள் தான் தாய்-தந்தையை எண்ணி கவலையில் ஆழ்ந்துள்ளது.

கள்ளக்காதல் கேடுதரும், வாழ்க்கையின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும்!! Illegal Affair Life Is Dangerous, It's Spoil our Entire Future Life!!

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 30, 2022 08:28 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).