Tiruvannamalai Accident: அரசு பேருந்து - கார் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து; 5 பேர் பரிதாப பலி..! திருவண்ணாமலையில் சோகம்.!
திருவண்ணாமலை - பெங்களூர் நெடுஞ்சாலையில், செங்கம் பகுதிகளில் தொடர் வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன
அக்டோபர் 24, செங்கம் (Tiruvannamalai News): திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செங்கம், அந்தனூர் திருவண்ணாமலை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இன்று கோர விபத்து ஏற்பட்டது.
பெங்களூருவில் இருந்து வந்த அரசு பேருந்து - திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு நோக்கி பயணித்த கார் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆறு பேர் படுகாயம் அடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர். Omni Bus Strike: ஆயுத பூஜைக்கு ஊருக்குச்சென்ற மகளுக்கு அதிர்ச்சி செய்தி; தனியார் ஆம்னி பேருந்துகள் ஓடாது என அறிவிப்பு.!
விபத்து குறித்து தகவல் அறிந்த செங்கம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர், விபத்தில் சீக்கியரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், உயிரிழந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்கள் யார்? என்ற விசாரணை நடந்து வருகிறது.
#WATCH | Tamil Nadu | A car collided with a State Government bus at Sangam - Krishnagiri Highways, Tiruvannamalai District. Deaths and injuries feared. Details awaited. pic.twitter.com/dJvjEbnBVp
— ANI (@ANI) October 24, 2023
(The above story first appeared on LatestLY on Oct 24, 2023 11:37 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

