TN Weather Update: 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. நாளைய வானிலை அப்டேட்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TN Weather Update: 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. நாளைய வானிலை அப்டேட்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!
Tomorrow weather (Photo Credit: LatestLY)

ஆகஸ்ட் 20, சென்னை (Chennai): சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதனால் தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளைய வானிலை (Tomorrow weather): நாளை தமிழகத்தில் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் (The Chennai Meteorological Department) அறிக்கை வெளியிட்டுள்ளது. Fake NCC Camp Case: கிருஷ்ணகிரி தனியார் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; அதிரடி உத்தரவு பிறப்பித்த தனியார் பள்ளி இயக்குனரகம்.!

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகள், வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அரபிக் கடலோர பகுதிகளில் இன்று முதல் வரும் 24ஆம் தேதி வரை தமிழக கடலோர பகுதிகள், வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

(The above story first appeared on LatestLY on Aug 20, 2024 03:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).