TNPSC Group 2 Update: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு: விபரம் உள்ளே.!
அரசு பணிகளுக்கான குரூப் 2 தேர்வுகளை எழுதி காத்திருப்போருக்கு, அடுத்தகட்ட அறிவிப்பை தேர்வாணையம் வெளியிட்டு இருக்கிறது.
மே 10, சென்னை (Chennai): தமிழ்நாட்டு இளைஞர்களின் கனவாக இருக்கும் அரசுப்பணியை அடைய, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (Tamilnadu Public Service Commission TNPSC) சார்பில் தேர்வுகள் நடத்தப்பட்டு, அரசுத்துறையில் உள்ள அதிகாரிகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில், குரூப் 2 மற்றும் 2ஏ (TNPSC Group II & II A) முதல்நிலை தேர்வுகள் அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த 2022 மே மாதம் 21ம் தேதி நடத்தப்பட்டது. 9 இலட்சம் பேர் விண்ணப்பித்து இருந்த தேர்வில், 57,641 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, இவர்களில் 55,071 பேர் முதன்மை தேர்வுக்கு விண்ணப்பித்து 2023 பிப்ரவரி மாதம் 25ம் தேதி அத்தேர்வுகளும் நடைபெற்று முடிந்தன. சமீபத்தில் அதற்கான முடிவுகள் அனைத்தும் வெளியிடப்பட்டன. இந்த முடிவுகளை தொடர்ந்து அடுத்தகட்டமாக தேர்ச்சி செய்யப்பட்டோரின் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் அடுத்தகட்டமாக நடைபெறவுள்ளன. TN SSLC Results 2024 On tnresults.nic.in: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு; அரியலூர் டாப்... வெற்றியை தட்டித்தூக்கிய மாணவிகள்.. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைவு.!
சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளுக்கான அழைப்பு: இதில் நேர்முகத்தேர்வு கொண்ட 161 காலிப்பணியிடங்களுக்கு 483 பேர் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளது. இவர்கள் இரண்டு கட்டமாக பிரித்து அழைக்கப்பட்டு கலந்தாய்வு நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும். அதே நேரத்தில், கலந்தாய்வு இல்லாத 5990 பணியிடத்தை நிரப்பும் பணியும் நடைபெற்று வருகின்றன. இவர்கள் அனைவரின் அசல் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் மற்றும் கலந்தாய்வுகள் மே மாதம் 15 ம் தேதி முதல் ஜூன் மாதம் 20 ம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சான்றிதழை இணையவழியில் தங்களின் பயனர் விபரம் மூலமாக பதிவேற்றவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அதேவேளையில், நேர்முகத்தேர்வுக்கு தயாராகும் நபர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள காலக்கெடுவை சரிபார்த்து டிஎன்பிஎஸ்சி (https://www.tnpsc.gov.in/) அலுவலகத்திற்கு வருகை தரவேண்டும். வாய்ப்பை தவறவிட்டால் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்ட்டுள்ளது.
கூடுதல் விபரங்களை https://www.tnpsc.gov.in/Document/PressEnglish/63_2024_Press%20release_%2007.05.2024%20pdf.pdf என்ற பக்கத்திற்கு சென்று நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
(The above story first appeared on LatestLY on May 10, 2024 10:57 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

