Gold Silver Price: இன்று தங்கம் விலை ரூ.400 சரிவு.. இன்றைய விலை நிலவரம் இதோ..!

சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.63,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gold Silver Price (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 28, சென்னை (Chennai News): உலகளவில் நடைபெறும் போர்கள், அமெரிக்க பங்குச் சந்தை வர்த்தக முதலீடுகள், பொருளாதார பிரச்சனை உட்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை என்பது கணிசமாக உயர்வை சந்தித்து இருக்கிறது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் சவரன் விலை ரூ.50 ஆயிரத்தை கடந்து இருந்த நிலையில், தற்போது ரூ.65 ஆயிரம் நோக்கி செல்கிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை சரிவை சந்தித்து வருகிறது. பிப்ரவரி 28ஆம் தேதியான இன்று வெள்ளிக்க்கிழமை, தங்கத்தின் விலை சற்று சரிவை கண்டுள்ளது. இதனால் நகைப்பிரியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Gold Silver Price: தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை சரிவு.. இன்றைய விலை நிலவரம் என்ன..?

தங்கம் விலை இன்று (Today Gold Rate in Chennai) & வெள்ளி விலை இன்று (Silver Price in Chennai):

இன்று (பிப்ரவரி 28) 22 கேரட் தங்கத்தின் (Gold) விலை ஒரு கிராமுக்கு ரூ.50 குறைந்து, கிராம் தங்கம் ரூ.7,960க்கு விற்கப்படுகிறது. 8 கிராம் சவரன் தங்கம் விலை ரூ.400 சரிந்து, இன்று ரூ.63,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி (Silver) விலை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து, வெள்ளி ஒரு கிராம் ரூ.105க்கும், வெள்ளி கிலோ ரூ.1,05,000க்கு விற்கப்படுகிறது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement