Gold Silver Price: தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை சரிவு.. இன்றைய விலை நிலவரம் என்ன..?
சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.64,080க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பிப்ரவரி 27, சென்னை (Chennai News): உலகளவில் நடைபெறும் போர்கள், அமெரிக்க பங்குச் சந்தை வர்த்தக முதலீடுகள், பொருளாதார பிரச்சனை உட்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை என்பது கணிசமாக உயர்வை சந்தித்து இருக்கிறது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் சவரன் விலை ரூ.50 ஆயிரத்தை கடந்து இருந்த நிலையில், தற்போது ரூ.65 ஆயிரம் நோக்கி செல்கிறது. இந்நிலையில், பிப்ரவரி 27ஆம் தேதியான இன்று வியாழக்கிழமை, தங்கத்தின் விலை சற்று சரிவை கண்டுள்ளது. இதனால் நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Gold Silver Price: தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 சரிவு.. நகைப் பிரியர்களுக்கு குட் நியூஸ்..!
தங்கம் விலை இன்று (Today Gold Rate in Chennai) & வெள்ளி விலை இன்று (Silver Price in Chennai):
இன்று (பிப்ரவரி 27) 22 கேரட் தங்கத்தின் (Gold) விலை ஒரு கிராமுக்கு ரூ.40 குறைந்து, கிராம் தங்கம் ரூ.8,010க்கு விற்கப்படுகிறது. 8 கிராம் சவரன் தங்கம் விலை ரூ.320 சரிந்து, இன்று ரூ.64,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி (Silver) விலையில் மாற்றமில்லாமல், வெள்ளி ஒரு கிராம் ரூ.106க்கும், வெள்ளி கிலோ ரூ.1,06,000க்கு விற்கப்படுகிறது.
(The above story first appeared on LatestLY on Feb 27, 2025 10:23 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

