Gold Silver Price: மீண்டும் உயரத்தொடங்கும் தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் இதோ.!

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரூ.59 ஆயிரம் வரை சென்று பின் மீண்டும் குறைந்த தங்கம், தற்போது மீண்டும் உச்சத்தை நோக்கி நகருகிறது.

Gold Silver Price (Photo Credit: Pixabay)

ஜனவரி 10, சென்னை (Chennai News): இந்தியாவில் தங்கத்தின் மீதான நுகர்வு, மத்திய-மாநில அரசின் இறக்குமதி வரிகள் போன்றவை காரணமாக விலை உச்சத்தில் இருந்து வருகிறது. மேலும், சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள தங்கத்தின் மீதான நுகர்வு, நாடுகளுக்கு இடையேயான போர், பதற்ற சூழ்நிலை காரணமாகவும், தங்கத்தின் விலை என்பது கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. Chennai Shocker: 14ல் காதல், 16ல் குழந்தை, கள்ளக்காதலருடன் ஓட்டம் பிடித்த சிறுமி.. அதிர்ச்சியை தரும் பகீர் சம்பவம்.! 

இன்றைய தங்கம் விலை (Today Gold Price in Chennai):

இந்தியாவை பொறுத்தவரையில் தங்கத்தின் விலை எப்படி இருந்தாலும், மக்கள் அதனை வாங்கி குவித்து வருகின்றனர். நேற்று (09 ஜனவரி 2025) தங்கம் கிராமுக்கு ரூ.7,260 க்கும், சவரன் ரூ.58,080 க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலை கிலோ ரூ.1,00,000 க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை கிராம் ரூ.25 உயர்ந்து, ரூ.7,285 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, சவரன் தங்கத்தின் விலை ரூ.200 உயர்ந்து, ரூ.58,280 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ.1000 உயர்ந்து, இன்று ரூ.1,01,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement