Girl Sad (Photo Credit: Pixabay)

ஜனவரி 10, புளியந்தோப்பு (Chennai News): 14 வயதில் காதல் வயப்பட்ட சிறுமி, 16 வயதில் குழந்தையை பெற்றெடுத்து, கணவன் - மனைவி சண்டையில், கள்ளக்காதலருடன் ஓட்டம் பிடித்த சம்பவம் சென்னை பெரம்பூரில் அரங்கேறியுள்ளது.

சென்னையில் உள்ள பெரம்பூர் (Perambur), புளியந்தோப்பு பகுதியில் வசித்து வரும் 34 வயதுடைய பெண்மணி, மீன் வியாபாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்த்து 16 வயதுடைய மகள் இருக்கிறார். இந்த சிறுமி பாரிமுனை பகுதியில் செயல்பட்டு வரும் துணிக்கடையில் வேலை பார்க்கிறார்.

காதல் திருமணம்:

இதனிடையே, சிறுமி தனது 14 வது வயதில் இருந்து, 2 ஆண்டுகளுக்கு முன்னதாகவே பிரகாஷ் என்பவருடன் காதல் வயப்பட்டு, அவரை உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் இருவரும் திருமணமும் செய்துகொண்ட நிலையில், சிறுமிக்கு ஒரு வயதுடைய பெண் குழந்தை இருக்கிறது. Heart Wrenching Horror: கணவன் - மனைவி, 3 மழலைகள் என ஐவர் கழுத்தறுத்து கொலை?; வீட்டில் மீட்கப்பட்ட சடலம்.. அதிர்ச்சியில் மக்கள்.! 

கணவன் - மனைவி சண்டை:

இந்நிலையில், தம்பதிகள் இடையே நிலவிய கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 6 மாதங்களாக கணவரை பிரிந்து பெற்றோருடன் சிறுமி வசித்து வருகிறார். கைக்குழந்தை அவரின் பராமரிப்பில் இருக்கிறது. தாயின் வீட்டில் இருந்த சிறுமிக்கு சதீஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஓட்டேரி காதலன் கைது:

இதனால் ஒருகட்டத்தில் சதீஷுடன் மனம்விட்டு பழகிய சிறுமி, கடந்த ஜன.03 அன்று, அவருடன் ஓட்டம் பிடித்ததாக தெரியவருகிறது. இந்த விஷயம் குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிறுமி மற்றும் அவரின் காதலன் ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில், அவர் ஓட்டேரி பகுதியில் வசித்து வரும் டேனி என்ற சதிஷ் குமார் (வயது 19) என்பது உறுதியானது.

போலியான ஆவணம் கொடுத்து குழந்தை பிரசவம்:

இருவரிடமும் காவல் நிலையத்தில் வைத்து நடந்த விசாரணையில், சிறுமி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரகாஷை காதலித்து திருமணம் செய்தது தெரியவந்தது. மேலும், பிரகாஷினால் சிறுமி கர்ப்பமானபோது, மருத்துவமனையில் வேறொருவரின் ஆதாரை காண்பித்து குழந்தை பெற்றுக்கொண்ட சம்பவமும் உறுதி செய்யப்பட்டது. எதிரி பெரியார்., இனி நாதகவின் பணி இதுதான் - சீமான் ஆவேசம்.. பரபரப்பு பேச்சு.! 

Girl Sad | Baby File Pic (Photo Credit: Pixabay)
Girl Sad | Baby File Pic (Photo Credit: Pixabay)

கணவர், கள்ளக்காதலன் போக்ஸோவில் கைது:

குழந்தை பிறந்த 6 மாதத்திற்குள் தம்பதி இடையே நிலவிய கருத்து வேறுபாடு காரணமாக, சதீஷுடன் பழக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்ட காரணத்தால், அவருடன் சென்றதும் அம்பலமானது. இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் சிறுமியை திருமணம் செய்து குழந்தைக்கு காரணமாக இருந்த காதல் கணவர் பிரகாஷ், சிறுமியை ஆசைவார்த்தை கூறி தன்வசப்படுத்திய கள்ளக்காதலன் சதீஷ் ஆகியோரை போக்ஸோ சட்டத்தின் கீழ் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும், சிறுமிக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர்கள் முன் திருமணம் நடைபெற்றதா? காதல் திருமணம் செய்துகொண்டார்களா? எனவும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமூக ஆர்வலர்கள் வேதனை:

பள்ளிக்குச் சென்ற நேரத்தில் ஏற்பட்ட காதலை நம்பி திருமணம் செய்த சிறுமி, குழந்தையை பெற்றெடுத்த 6 மாதத்தில் கணவன் - மனைவி சண்டையால் வீட்டிற்கு வந்துள்ளார். சட்டப்படி ஏற்றுக்கொள்ள இயலாத திருமணத்தில், குழந்தையை ஈன்றெடுத்த பெண், புதிய காதலால் வேறொருவரை தேடி ஓடிய சம்பவம் சமூகத்தில் எந்த மாதிரியான மாற்றம் நிகழ்ந்துள்ளது என்பதை உணர்த்துவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:

சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3