Gold Silver Price: தங்கத்தின் விலை இன்று குறைவு.. இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ.!

நேற்று ஒரேநாளில் ரூ.2200 என்ற அளவில் உயர்ந்த தங்கம் இன்று இறக்கத்தை சந்தித்துள்ளது.

Today Gold Price (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 23, சென்னை (Chennai News): சர்வதேச அளவில் நீடித்து வரும் பொருளாதார பிரச்சனை, இந்திய முதலீட்டு சந்தையையும் கடுமையான அளவு பாதித்துள்ளது. இது இந்தியாவில் தங்கத்தின் விலையில் நேரடியாக பிரதிபலித்து, தங்கத்தின் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. கடந்த சில வாரங்கள் வரை ரூ.65 ஆயிரத்தில் இருந்து மெல்ல உயரத்தொடங்கிய தங்கம் இன்று ரூ.74 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. உலகளவில் ஏற்பட்டுள்ள தங்கத்தின் மீதான நுகர்வு காரணமாக, சவரன் தங்கத்தின் விலை சில ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் ரூ.1 இலட்சம் முதல் ரூ.2 இலட்சம் விற்பனை செய்யப்படலாம் என தகவல்கள் வெளிவருகின்றன. Pahalgam Terrorist Attack: பயங்கரவாத தாக்குதலின் நெஞ்சை பதறவைக்கும் காணொளி.. பொறுப்பேற்ற அமைப்பு..! பலி எண்ணிக்கை கிடுகிடு உயர்வு.! 

தங்கம் விலை இன்று (Today Gold Rate in Chennai) & வெள்ளி விலை இன்று (Silver Price in Chennai):

இந்நிலையில், இன்று சவரன் தங்கத்தின் விலை ரூ.72,120 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கத்தின் விலை இன்று ரூ.9,015 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிலோ ரூ.1,11,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையில் இருந்து தங்கம் சவரனுக்கு ரூ.2200 மற்றும் கிராமுக்கு ரூ.275 என்ற அளவில் இன்று குறைந்துள்ளது. வெள்ளியின் விலை ரூ.1000 என்ற அளவில் குறைந்த்துள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement