Gold Rate Today: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.680 குறைவு.. இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ.!

கடந்த சில நாட்களாக கடும் உச்சத்தை நோக்கி பயணித்த தங்கத்தின் விலை, இன்று ரூ.680 என்ற அளவில் சவரனுக்கு வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது.

Today Gold Price (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 02, சென்னை (Chennai News): உலகளவில் தங்கத்தின் மீதான நுகர்வு, போர்ப்பதற்றம், தேசிய அளவில் மத்திய-மாநில அரசின் இறக்குமதி வரிகள் போன்றவை காரணமாக, தங்கத்தின் விலை உச்சத்தில் இருந்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரையில் தங்கத்தின் விலை எப்படி இருந்தாலும், மக்கள் அதனை வாங்கி குவித்து வருகின்றனர். கடந்த சில வாரம் வரையில் ரூ.55,000 வரை இருந்த தங்கம் விலை, தற்போது ரூ.60,000-ஐ கடந்து சென்று விட்டது. Today Rasi Palan: இன்றைய நாள் உங்களின் ராசிக்கு எப்படி? இன்றைய ராசி பலனை உடனே தெரிஞ்சிக்கோங்க.! 

சென்னையில் இன்றைய தங்கம் விலை (Today Gold Rate in Chennai):

கடந்த வாரத்தில் ரூ.62 ஆயிரத்தை கடந்து பலரும் அதிர்ச்சி கொடுத்த தங்கம், இந்த வாரத்தின் முதல் நாளான இன்று, 03 பிப்ரவரி 2025-ல் லேசான சரிவை சந்தித்துள்ளது. இன்று சென்னையில் விற்பனை செய்யப்படும் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து, சவரன் தங்கம் விலை ரூ.61,640 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கத்தின் விலை ரூ.85 குறைந்து, இன்று கிராம் தங்கம் விலை ரூ.7,705 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement