பிப்ரவரி 03, சென்னை (Chennai News): இந்தியாவில் உள்ள மக்களால் பெரிதும் கவனிக்கப்படும் ராசிபலன், அன்றைய நாளை சிறப்பாக எடுத்துச்செல்லவும், கவனமுடன் செயல்படவும் உதவுகிறது. ஒவ்வொரு நாளின் தொடக்கமும் புதிய சிந்தனை, ஆற்றலுடன் தொடங்கி செயல்படுத்த நமது ராசியின் பலன் மிகப்பெரிய பங்கினை கொண்டிருக்கிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான ராசிபலன் (Today Rasi Palan Tamil), கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்த தகவலை எமது லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tami) பக்கத்தில் தெரிந்துகொள்ளுங்கள்.
மேஷம் இன்றைய ராசி பலன் (Mesham Today Rasi Palan):
உங்களை விட்டு பிரிந்து சென்றோர் குறித்த எண்ணம் ஏற்படும். மனை தொடர்பான உதவி சாதகப்படும். அலுவலக பணியில் விவேகம் இருக்கும். உறவினரின் வழியில் முன்னேற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் பொறுமை வசியம். வீடு மாறுவது தொடர்பான எண்ணம் மேலோங்கும். பெரியோரின் ஆலோசனை தெளிவை தரும். கல்விப்பணியில் ஆர்வம் குறையும். சிக்கல்கள் குறையும் நாளாக இன்று அமைகிறது. அதிஷ்ட நிறம் இளம் மஞ்சள்.
ரிஷபம் இன்றைய ராசி பலன் (RIshabham Today Rasi Palan):
குடும்பத்துடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை உண்டாகும். சுப நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். சேமிப்பு எண்ணம் அதிகரிக்கும். பணியிடத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறும். வெளிவட்டாரம் அனுபவத்தை கொடுக்கும். பொழுதுபோக்கு செயல் விரயத்தினை ஏற்படுத்தும். நன்மை உண்டாகும் நாளாக இன்று அமைகிறது. அதிஷ்ட நிறம் இளம் மஞ்சள்.
மிதுனம் இன்றைய ராசி பலன் (Mitunam Today Rasi Palan):
உறவுகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். கல்விப்பணி மேன்மையை தரும். சிந்தனை தெளிவாகும். துணையின் வழி உறவுகளில் ஆதாயம் கிடைக்கும். விலை உயர்வான பொருட்களை வாங்கி மகிழலாம். வியாபார சிந்தனை மேலோங்கும். அரசு விஷயங்களில் ஆதரவு நிலை ஏற்படும். பணி தொடர்பான தொழில்நுப்பதை கற்றறிவீர்கள். அமைதி நிறைந்த நாளாக இன்று அமைகிறது. அதிஷ்ட நிறம் இளம் சிவப்பு.
கடகம் இன்றைய ராசி பலன் (Kadakam Today Rasi Palan):
கணவன் மனைவி நெருக்கம் அதிகமாகும். சுபகாரியம் ரீதியிலான விரயம் ஏற்படும். விலை உயர்ந்த பொருள் மீது ஆசை உண்டாகும். திட்டமிட்ட காரியம் நடக்கும். பணியிடத்தில் சூட்சமம் அறிந்து செயல்படலாம். பிரபலமான நபரின் அறிமுகம் கிடைக்கும். செலவு நிறைந்த நாளாக இன்று அமைகிறது. அதிஷ்ட நிறம் காவி. Budget 2025: பட்ஜெட் 2025 அறிவிப்புகள் என்னென்ன? முழு விபரம் இதோ.!
சிம்மம் இன்றைய ராசி பலன் (SImmam Today Rasi Palan):
எதிர்பாராத செலவு நெருக்கடியை தரும். பயனில்லாத பேச்சை தவிர்க்கலாம். உணவு விஷயத்தில் கவனம் வேண்டும். ஆரோக்யத்தில் மந்த நிலை ஏற்படும். பிறரிடம் வாக்குறுதி அளிக்கும்போது, சூழ்நிலை தெரிந்து செயல்படுதல் நல்லது. குடும்ப உறுப்பினரிடம் பொறுமை வேண்டும். கவனம் வேண்டிய நாளாக இன்று அமைகிறது. அதிஷ்ட நிறம் பச்சை.
கன்னி இன்றைய ராசி பலன் (Kanni Today Rasi Palan):
பூர்வீக சொத்து அனுகூலத்தை தரும். துணையின் வழியில் மகிழ்ச்சி செய்தி வரும். சுபகாரியத்தில் வற்றி கிடைக்கும். பழைய நண்பரின் அறிமுகம் மீண்டும் ஏற்படும். தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபார விஷயத்தில் ஒத்துழைப்பு கிடைக்கும். அலுவலக பணியில் சாதகமான நிலை ஏற்படும். மாற்றம் பிறக்கும் நாளாக இன்று அமைகிறது. அதிஷ்ட நிறம் சிவப்பு.
துலாம் இன்றைய ராசி பலன் (Thulam Today Rasi Palan):
நண்பரின் வழியில் அலைச்சல் உண்டாகும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சி செய்தி வரும். பிறரின் தேவையை அறிந்து நிறைவேற்றலாம். வியாபாரத்தில் மேன்மை கிடைக்கும். பணிகளில் கடினமானதும் முடிவுக்கு வரும். நினைத்த காரியம் கைகூடும். வரவு நிறைந்த நாளாக இன்று அமைகிறது. அதிஷ்ட நிறம் ஊதா.
விருச்சிகம் இன்றைய ராசி பலன் (Viruchigam Today Rasi Palan):
உடனிருக்கும் நபரின் புரிதல் அதிகமாகும். அக்கம்-பக்கத்தில் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் நம்பிக்கை மேலோங்கும். நண்பர்கள் வாயிலாக ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் நுணுக்கங்களை அறிந்துகொள்ளலாம். பணியிடத்தில் சாதகமான வாய்ப்பு கிடைக்கும். மனதில் நினைத்த ஆசை கைகூடும். தாமதம் விலகும் நாளாக இன்று அமைகிறது. அதிஷ்ட நிறம் பொன்.
தனுசு இன்றைய ராசி பலன் (Dhanusu Today Rasi Palan):
திட்டமிட்டபடி காரியம் நிறைவேறும். வெளிவட்டார அனுபவம் கிடைக்கும். வீடு, வாகனம் சீர் செய்யும் எண்ணம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் விரயத்தை தரும். வியாபார எதிர்ப்பு சமாளிக்கப்படும். உடன் பணியாற்றும் ஊழியருக்கு ஆதரவாக இருக்கலாம். உழைப்புக்கு மதிப்பு கிடைக்கும். ஜெயம் நிறைந்த நாளாக இன்று அமைகிறது. அதிஷ்ட நிறம் செம்மை சிவப்பு. Anand Srinivasan: தனிநபர் வருமான வரி உச்சவரம்பு.. யாருக்கு சாதகம்? - ஆனந்த் ஸ்ரீனிவாசன்.!
மகரம் இன்றைய ராசி பலன் (Makaram Today Rasi Palan):
சுபகாரிய முயற்சி கைகூடும். அரசு பதவியில் இருப்போர் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத உதவி கைகூடும். வியாபார விஷயத்தில் புதிய வாய்ப்பு உண்டாகும். விளையாட்டு போட்டியில் ஆர்வம் ஏற்படும். மாறுபட்ட அணுகுமுறை மாற்றத்தை தரும். திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி கிடைக்கும். ஆதரவு நிறைந்த நாளாக இன்று அமைகிறது.
கும்பம் இன்றைய ராசி பலன் (Kumbam Today Rasi Palan):
நிதானமான பேச்சு நன்மதிப்பை வழங்கும். குழந்தையின் விருப்பம் அறிந்து நிறைவேற்றலாம். பார்வை பிரச்சனை குறையும். பொருளாதார சிக்கல் கட்டுப்படும். பணியில் அதிகாரியை அனுசரித்து செல்லலாம். தனரீதியான வரவில் ஏற்ற-இறக்கம் இருக்கும். வாக்குறுதி அளிக்கும்போது சிந்திப்பது நல்லது. வெற்றி நிறைந்த நாளாக இன்று அமைகிறது.
மீனம் இன்றைய ராசி பலன் (Meenam Today Rasi Palan):
விலையுயர்ந்த பொருளின் மீது ஆர்வம் அதிகமாகும். குடும்ப உறுப்பினரின் தேவையை நிறைவேற்றலாம். நுட்பமான விஷயத்தில் கவனம் தேவை. சேமிப்பு விஷயத்தில் சிந்தனை அதிகரிக்கும். செயலில் இருந்த தயக்கம் குறையும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். மனதளவில் குழப்பம் நீங்கும். ஆக்கபூர்வமான நாளாக இன்று அமைகிறது. அதிஷ்ட நிறம் இளமையான நீலம்.
03 பிப்ரவரி 2025 இன்றைய பஞ்சாங்கம் (Today Panchangam):
நல்ல நேரம் (Today Nalla Neram) காலை 06:30 முதல் 07:30 வரை
நல்ல நேரம் மாலை 05:00 முதல் 06:00 வரை
கௌரி நல்ல நேரம் (Gowri Nalla Neram) காலை 09:30 முதல் 10:30 வரை
கௌரி நல்ல நேரம் மாலை 07:30 முதல் 08:30 வரை
ராகு காலம்: நண்பகல் 07:30 முதல் 09:00 வரை
குளிகை காலம்: காலை 01:30 முதல் 03:00 வரை
எமகண்டம் காலம் (Today Yamagandam Timing): காலை 10:30 முதல் 12:00 வரை