Gold Silver Price: இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 உயர்வு.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ.!
நேற்று சற்று குறைந்த தங்கம் விலை, இன்று மீண்டும் ரூ.840 உயர்ந்து இருக்கிறது. வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.1000 அளவில் குறைந்து இருக்கிறது.
பிப்ரவரி 04, சென்னை (Chennai News): உலகளவில் தங்கத்தின் மீதான நுகர்வு, போர்ப்பதற்றம், தேசிய அளவில் மத்திய-மாநில அரசின் இறக்குமதி வரிகள் போன்றவை காரணமாக, தங்கத்தின் விலை உச்சத்தில் இருந்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரையில் தங்கத்தின் விலை எப்படி இருந்தாலும், மக்கள் அதனை வாங்கி குவித்து வருகின்றனர். கடந்த சில வாரம் வரையில் ரூ.55,000 வரை இருந்த தங்கம் விலை, தற்போது ரூ.60,000-ஐ கடந்து சென்று விட்டது. TN Cabinet Meeting: மாநில பட்ஜெட்-க்கு தயாராகும் தமிழ்நாடு அரசு.. அமைச்சரவை கூட்டம் அறிவிப்பு.!
சென்னையில் இன்றைய தங்கம் விலை (Today Gold Rate in Chennai):
கடந்த வாரத்தில் ரூ.62 ஆயிரத்தை கடந்து பலரும் அதிர்ச்சி கொடுத்த தங்கம், தற்போது ரூ.63 ஆயிரத்தை நோக்கி பயணிக்கிறது. நேற்று தங்கத்தின் விலை சற்று குறைந்ததுபோல தோன்றினாலும், இன்று சென்னையில் விற்பனை செய்யப்படும் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து, சவரன் தங்கம் விலை ரூ.62,480 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கத்தின் விலை ரூ.105 உயர்ந்து, இன்று கிராம் தங்கம் விலை ரூ.7,810 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை நேற்றில் இருந்து கிலோவுக்கு ரூ.1000 குறைந்து, இன்று வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.1,06,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.