பிப்ரவரி 03, தேனாம்பேட்டை (Chennai News): இந்திய நாடாளுமன்றத்தில் 2025 - 2026ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் (Budget 2025), மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) தலைமையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி, புதிய வருமான வரி சட்டம், ஏஐ தொழில்நுட்பங்களை மருத்துவம் உட்பட பல கல்வித்துறையில் அறிமுகம் செய்தல், புதிய விமான நிலையங்கள் மற்றும் விமான வழித்தடங்கள் ஏற்படுத்துதல், விவசாயிகளுக்கான பல்வேறு அறிவிப்புகள் போன்றவை தெரிவிக்கப்பட்டு இருந்தன. குறிப்பாக பீகார் மாநிலத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, சில முக்கிய திட்டங்களை அம்மாநிலத்தில் செயல்படுத்தவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் தமிழ்நாட்டுக்கு நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்களுக்கான அறிவிப்பு இல்லை. இது தமிழக மக்களை, தமிழ்நாட்டின் மாநில வளர்ச்சியை புறக்கணிக்கும் செயல் என திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவித்தது. வானிலை: அடுத்த ஒரு வாரம் வறண்ட வானிலை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்:
இந்நிலையில், வரும் பிப்ரவரி 10ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமை செயலகத்தில், தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில், காலை 11 மணியளவில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் தமிழ்நாடு மாநில பட்ஜெட் (Tamilandu Budget Session 2025) நடைபெறவுள்ளது. இதனை கருத்தில் கொண்டு துறை சார்ந்த அமைச்சர்கள், செயலர்களுடன் தமிழ்நாடு முதல்வர் ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் எதிர்வரும் ஆண்டில் மக்களுக்கு செயல்படுத்த வேண்டிய திட்டம், 2026 தேர்தலை கருத்தில் கொண்டு மக்களுக்கான திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.