Gold Silver Price: ரூ.73,000-ஐ கடந்தது தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் இதோ.! ஒரே நாளில் உச்சக்கட்டம்.!

கடந்த சில நாட்களாக குறைந்த தங்கம் விலை, தற்போது மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது. இதனால் தங்கத்தில் விலையானது ரூ.73,000ஐ கடந்து விற்பனையாகிறது.

Today Gold Price (Photo Credit: Pixabay)

ஜூன் 05, சென்னை (Chennai News): சர்வதேச அளவில் நீடித்து வரும் பொருளாதார பிரச்சனை, உலகளவில் நடந்து வரும் போர்கள், அதனால் ஏற்படும் நேரடி/மறைமுக பாதிப்புகள், கிடைக்கும் தங்கத்தின் அளவு, உலகளாவிய தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவை பொறுத்தவரையில் தங்கத்தின் விலை ரூ.74,000ஐ கடந்து சென்று சரிவை சந்தித்தது. தற்போது மீண்டும் அத்தொகையை நோக்கி மெல்ல உயர்ந்து வருகிறது. Madurai News: கடன் பிரச்சனையால் தம்பதிகளின் உயிரே போச்சு.. கழுத்தை நெரித்த கடனால் விபரீதம்.! 

தங்கம் விலை இன்று (Today Gold Rate in Chennai) & வெள்ளி விலை இன்று (Silver Price in Chennai):

இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் விற்பனை செய்யப்படும் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.73,040 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கத்தின் விலை ரூ.40 உயர்ந்து கிராம் தங்கம் இன்று ரூ.9,130 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை மாற்றமின்றி ரூ.1,14,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement