Gold Silver Price: தொடர்ந்து 3 நாட்களாக தங்கம் விலை குறைவு.. இன்றைய விலை நிலவரம் இதோ.!
கடந்த சில நாட்களாக உயர்ந்த தங்கம் விலை, தற்போது குறைந்துள்ளது. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரத்தை தெரிந்துகொள்ள லேட்டஸ்ட்லி தமிழை பின்தொடரவும்.
ஜூன் 10, சென்னை (Chennai News): சர்வதேச அளவில் நீடித்து வரும் பொருளாதார பிரச்சனை, உலகளவில் நடந்து வரும் போர்கள், அதனால் ஏற்படும் நேரடி/மறைமுக பாதிப்புகள், கிடைக்கும் தங்கத்தின் அளவு, உலகளாவிய தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவை பொறுத்தவரையில் தங்கத்தின் விலை ரூ.74,000ஐ கடந்து சென்று சரிவை சந்தித்தது. தற்போது மீண்டும் அத்தொகையை நோக்கி மெல்ல உயர்ந்து வருகிறது. Chennai News: 13 வயது சிறுமி கால்களை முறித்து பலாத்காரம்.. செக்யூரிட்டியின் பதறவைக்கும் செயல்.!
தங்கம் விலை இன்று (Today Gold Rate in Chennai) & வெள்ளி விலை இன்று (Silver Price in Chennai):
இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. சென்னையில் விற்பனை செய்யப்படும் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.71,560 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கத்தின் விலை ரூ.10 குறைந்து கிராம் தங்கம் இன்று ரூ.8,945 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை மாற்றமின்றி ரூ.1,17,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.