
ஜூன் 09, தாம்பரம் (Chennai News): சென்னையில் உள்ள தாம்பரம், சானிடோரியம் பகுதியில் அரசு விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் தந்தையை இழந்து குடும்ப வறுமையால் வாடிய கள்ளக்குறிச்சியை சேர்ந்த 13 வயது சிறுமி தங்கி பயின்று வந்துள்ளார். இவர் 8 ஆம் வகுப்பு பயின்று வரும் நிலையில், நேற்று தனியாக இருந்த சிறுமியின் முகத்தில் துணியை மூடி, ஒப்பந்த ஊழியரான காவலாளி மேத்யூ (வயது 50 ) பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் பதறிய சிறுமி அங்கிருந்து தப்பியோட முயலவே, அவரின் கால்களை முறித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
உடலில் காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி :
உடலில் காயங்களுடன் இரண்டு கால்களும் முறிந்த நிலையில் கிடந்த சிறுமியை அங்கிருந்தவர்கள் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனிடையே சிட்லபாக்கம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சேலையூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கு உடனடியாக வழக்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சேலையூர் போலீசார் மேத்யூவை கைது செய்தனர். Mumbai Train Accident: கூட்ட நெரிசல்.. இரயிலில் தொங்கியபடி பயணித்த 5 பேர் பலி.. 7 பேர் படுகாயம்.!
சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை :
மேலும் சிறுமியை மேல்சிகிச்சைக்காக அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 15 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளராக வேலை பார்த்து வரும் மேத்யூ, அங்குள்ள வேறு மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாரா? என்பது குறித்தும் சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:
சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3