Gold Silver Price: மக்களே இதுதான் சரியான வாய்ப்பு.. தங்கம் விலை குறைவு..!

ரூ.68,000/- கடந்து இருந்த தங்கத்தின் விலையானது தற்போது மீண்டும் மெல்ல குறையத் தொடங்கியுள்ளது. இன்று 1 கிராம் தங்கம் விலை இன்று ரூ.66,280 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Today Gold Price (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 02, சென்னை (Chennai News): சர்வதேச அளவில் நீடித்து வரும் பொருளாதார பிரச்சனை, இந்திய முதலீட்டு சந்தையையும் கடுமையான அளவு பாதித்துள்ளது. இதனால் இந்தியாவில் தங்கத்தின் விலை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகளவில் ஏற்பட்டுள்ள தங்கத்தின் மீதான நுகர்வு காரணமாக, சவரன் தங்கத்தின் விலை சில ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் ரூ.1 இலட்சம் முதல் ரூ.2 இலட்சம் விற்பனை செய்யப்படலாம் என தகவல்கள் வெளிவருகின்றன. தங்கநகைக்கடை உரிமையாளர்களும் அதனை உறுதி செய்கின்றனர். KN Nehru ED Raid: அமைச்சர் கே.என் நேருவின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. குவியும் தொண்டர்கள்.. பரபரப்பில் அரசியல் வட்டாரம்.!  

தங்கம் விலை இன்று (Today Gold Rate in Chennai) & வெள்ளி விலை இன்று (Silver Price in Chennai):

இந்நிலையில், இன்று திங்கள்கிழமை சவரன் தங்கத்தின் விலை ரூ.66,280 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கத்தின் விலை இன்று ரூ.8,825 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிலோ ரூ.114000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 68,000ஐ கடந்து இருந்த தங்கம் விலை, கடந்த 2 நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. தங்கம் வாங்க நினைத்தோர் இவ்வாய்ப்பை பயன்படுத்தலாம். வரும் நாட்களில் தங்கத்தின் விலை உயருமா? வீழ்ச்சி அடையுமா? என்பதில் தொடர் சிக்கல் நீடிப்பதால், விலை குறையும்போதே வாங்குவது நல்லது எனவும் தங்கநகை வியாபரிகள் தெரிவிக்கின்றனர்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement