KN Nehru Raided by ED Today 07 April 2025 (Photo Credit: @AIRNewsTrichy / @KNNehru X)

ஏப்ரல் 07, தில்லை நகர் (Trichy News): திருச்சி தில்லை நகரில் உள்ள திமுக அமைச்சர் கே.என் நேருவின் (KN Nehru) வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் கே.என் நேருவின் மகன் அருண், சகோதரர் கே.என் ரவிச்சந்திரன் ஆகியோரின் வீடு & அலுவலகம் என 6 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக அமைச்சர் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அமைச்ச கே.என் நேருவின் தம்பி மணிவண்ணனின் வீட்டிலும் சோதனை நடக்கிறது. ED Raid: அமைச்சர் கே.என் நேரு மகன் & உறவினர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை.. துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு.! 

துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு:

3 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், 10 க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் காவல்துறையினரை பாதுகாப்புக்கு துப்பாக்கியுடன் அழைத்து வந்துள்ளனர். கே.என் நேருவின் ஆதரவாளர்கள் அமலாக்கத்துறை ரெய்டு குறித்த தகவல் அறிந்து வீட்டில் குவிந்து வருவதால் காவல்துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையை தொடர்ந்து திருச்சி, கோவை ஆகிய இடங்களிலும் அமலாக்கத்துறை நடத்தப்படுவதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளது.

அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சரின் வீட்டில் சோதனை நடத்தும் காட்சிகள்: