Two men died in Kumbakonam: அதிக போதை பெற மதுபானத்துடன் சானிடைசர்: கூலித் தொழிலாளிகள் பலி.!
கும்பகோணம் அடுத்த மேல காவேரி பகுதியில் அதிக போதைக்காக மதுபானத்துடன் சானிடைசரை கலந்து குடித்து இருவர் உயிரிழந்திருக்கின்றனர். ஆற்றங்கரையில் சடலங்களை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செப்டம்பர் 22, கும்பகோணம் (TamilNadu News): அதிக போதைக்கு ஆசைப்பட்டு மதுபானத்தில் சானிடைசர் கலந்து குடித்த இருவர் உயிரிழந்தனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த மேல காவேரி பகுதியைச் சேர்ந்த பாலகுரு மற்றும் சௌந்தர்ராஜ் ஒன்றாக கூலி வேலை செய்பவர்கள். இவர்கள் இருவரும் நேற்று காவிரி ஆற்றின் படித்துறையில் மது அருந்தி இருப்பதாக தெரிய வந்திருக்கிறது.
காலையில் ஆற்றங்கரையில் இருவரும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். சடலங்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். Asian Games 2023: அருணாச்சல பிரதேச வீராங்கனைகளுக்கு சீனா ஆசிய போட்டிகளில் முட்டுக்கட்டை: இந்தியா கடும் கண்டனம்.. மறுக்கப்படும் அனுமதி..!
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரது சடலங்களையும் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சடலங்களின் அருகே மது பாட்டலுடன் சானிடைசரும் இருந்திருக்கிறது.
அதனால் இருவரும் அதிக போதைக்காக மதுபானத்தில் சானிடைசர் கலந்து குடித்தார்களா? அல்லது போலி மதுபானம் குடித்துவிட்டு உயிரிழந்தார்களா? என்பதை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on Sep 22, 2023 08:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

