Explosion At Firecracker Factory: விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. இருவர் மரணம்..!
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.
ஜனவரி 24, விருதுநகர் (Virudhunagar): விருதுநகர் அடுத்த ஆர்.ஆர் நகர் பகுதியில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான தனியார் பட்டாசு ஆலை அமைந்துள்ளது. மூன்று மாடி கட்டிடம் கொண்ட பட்டாசு ஆலை இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் தரைமட்டமாகியுள்ளது. இதில் இருவர் சம்பவ இடத்தில மரணமடைந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Australia Halts Golden Visa: கோல்டன் விசா திட்டம் நிறுத்தம்.. ஆஸ்திரேலியாவின் அதிரடி முடிவு..!
பட்டாசுக்காண ரசாயன மூலப் பொருட்களை கலவை செய்த போது ஏற்பட்ட உராய்வு காரணமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி காயமடைந்தவர்களை மீட்டனர். இச்சம்பவம் குறித்து வச்சக்காரப்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Two workers were killed and two others including a minor, sustained severe burn injuries due to an explosion at a #cracker unit in Vachakarapatti on Wednesday. #Virudhunagar@xpresstn@NewIndianXpress pic.twitter.com/S5ztmHgNQ7
— Harini (@harini_1997) January 24, 2024
(The above story first appeared on LatestLY on Jan 24, 2024 01:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

