Elephant Attack: திருச்செந்தூர் கோவில் யானை மிதித்து பாகன் உட்பட இருவர் பலி..!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் யானை மிதித்து பாகன் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Elephant Attack: திருச்செந்தூர் கோவில் யானை மிதித்து பாகன் உட்பட இருவர் பலி..!
Thiruchendur Murugan Temple Elephant (Photo Credit: YouTube)

நவம்பர் 18, திருச்செந்தூர் (Thoothukudi News): தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் (Thiruchendur) முருகன் கோவிலில் யானை மிதித்து பாகன் உட்பட 2 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் கோவிலில் உள்ள தெய்வானை யானை (Elephant), பக்தர்களுக்கு ஆசி வழங்குவது உண்டு. இந்நிலையில், இன்று (நவம்பர் 18) யானை கட்டி வைக்கப்பட்டு இருந்த இடத்துக்கு சென்ற பாகன் உதயகுமார், யானைக்கு பழங்கள் கொடுத்துக் கொண்டிருந்தார். உடன் அவரது உறவினர் சிசுபாலன் இருந்துள்ளார். வானிலை: வெளுக்கப்போகும் கனமழை; நாளைய வானிலை நிலவரம் என்ன?.. விபரம் உள்ளே.!

இந்நிலையில், பழங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த யானை திடீரென திமிறி உள்ளது. நொடிப்பொழுதில் ஆக்ரோஷமாக அருகில் இருந்த பாகன் உதயகுமார், சிசுபாலன் இருவரையும் தூக்கி போட்டு மிதித்துள்ளது. இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Nov 18, 2024 07:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).