Transgender Attacking Police: மது போதையில் தகராறு செய்த 2 திருநங்கைகள் – காவல்துறை அதிகாரி மீது தாக்குதல்..!

காவல்துறை அதிகாரியை தாக்கிவிட்டு இரண்டு திருநங்கைகள் மோட்டார் வாகனத்தில் தப்பிச்சென்றுள்ளனர்.

Transgender Attacking Police: மது போதையில் தகராறு செய்த 2 திருநங்கைகள் – காவல்துறை அதிகாரி மீது தாக்குதல்..!
Crime File Picture (Photo Credit: Pixabay)

மார்ச் 16, மாமல்லபுரம் (Chengalpattu News): செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி சுங்கச்சாவடி சந்திப்பு பகுதியில், காவல்துறை அதிகாரி ராஜசேகர் பாதுகாப்பு பணியில் இருந்துள்ளார். அதே பகுதியில் மீன் கடை அருகில் இரண்டு திருநங்கைகள் வாகன ஓட்டியிடம் தகராறு செய்து வந்துள்ளனர். தகவலறிந்து சென்ற காவல்துறை அதிகாரி ராஜ சேகர், இருவரையும் விசாரித்துள்ளார். Mini Lorry Accident: லாரி மீது மினி லாரி மோதி விபத்து – ஓட்டுநர் பலி..!

இதில், கோபமடைந்த திருநங்கைகள் காவல்துறை அதிகாரி ராஜசேகரை கடும் சொற்களால் திட்டி, அவரை தாக்கியுள்ளனர். கல்லை கொண்டும் அடிக்க முயன்றுள்ளனர். அந்த வழியே சென்ற அரசு பேருந்துகளையும் வழிமறைத்து, பேருந்து முன் அமர்ந்து கத்தி கூச்சலிட்டு தகராறு செய்துள்ளனர். இதனால், சற்று நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த தகவல் அறிந்து அருகில் பணியில் இருந்த போக்குவரத்து காவலர் வந்து, அவர்கள் இருவரையும் விசாரணைக்கு வரும்படி அழைத்துள்ளார். அவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திருநங்கைகள், அவர்களின் மோட்டார் வாகனத்தில் கல்பாக்கம் செல்லும் ரோட்டில் தப்பி சென்றுள்ளனர்.

இதனையடுத்து, காயமடைந்த காவல்துறை அதிகாரி ராஜசேகருக்கு மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், தகராறில் ஈடுபட்ட இரண்டு திருநங்கைகளும் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து, மாமல்லபுரம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

(The above story first appeared on LatestLY on Mar 16, 2024 04:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).