Woman Murder: 2 வாலிபர்கள் வீடு புகுந்து அராஜகம்; பெண் வெட்டிக் கொலை..!

தென்காசியில் வீட்டில் இருந்த பெண்ணை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Woman Murder: 2 வாலிபர்கள் வீடு புகுந்து அராஜகம்; பெண் வெட்டிக் கொலை..!
Murder | Crime File Pic (Photo Credit: Pixabay / Pexels)

ஏப்ரல் 16, செங்கோட்டை (Tenkasi News): தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை அருகே உள்ள விஸ்வநாதபுரம் ராஜீவ் நகரில் வசித்து வரும் தம்பதி சுடலைமாடன்-கோமதி (வயது 42). இவர்களுடைய மகள் பவித்ரா (வயது 24) என்பவருக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்துவிட்டது. மேலமெஞ்ஞானபுரத்தை சேர்ந்த ஒரு வாலிபருடன் திருமணம் நடந்து, இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்நிலையில், கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், இருவரும் பிரிந்துவிட்டனர். பவித்ரா விஸ்வநாதபுரத்தில் உள்ள தனது தாயாருடன் வசித்து வந்துள்ளார். அங்கிருந்து குத்துக்கல்வலசையில் உள்ள கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மாலை பவித்ராவும், கோமதியும் வீட்டில் இருந்த போது, திடீரென வீட்டிற்குள் புகுந்த 2 வாலிபர்கள் பவித்ராவை தாக்க முயன்றுள்ளனர். அதனை தடுக்க முயன்ற கோமதியை அவர்கள் வைத்திருந்த அரிவாளால் (Billhook) சரமாரியாக வெட்டியுள்ளனர். பவித்ராவையும் கழுத்து, தோள்பட்டை என வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். Boat Capsize Accident: ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 7 பேர் மீட்பு – 4 பேர் பலி..!

இதனை பார்த்த அப்பகுதி மக்கள், உடனடியாக செங்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த காவல்துறையினர், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கோமதி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். பவித்ராவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக செங்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், பவித்ரா கடையில் வேலை பார்த்த பகுதியில், வாலிபர் ஒருவர் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி வந்துள்ளார். அதற்கு இவர் மறுப்பு தெரிவித்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதனால் இந்த கொலைச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று காவல்துறையினர் மேலும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

(The above story first appeared on LatestLY on Apr 16, 2024 05:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).