Minor Girl Pregnant: 13 வயது சிறுமி கர்ப்பம்; வீடியோ எடுத்து மிரட்டிய இருவர் கைது..!

சென்னையில் 13 வயது சிறுமி வீட்டில் குளிக்கும்போது, அதனை வீடியோ எடுத்து மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்த இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Minor Girl Pregnant: 13 வயது சிறுமி கர்ப்பம்; வீடியோ எடுத்து மிரட்டிய இருவர் கைது..!
Gang Rape (Photo Credit: Pixabay)

ஜூன் 04, மடிப்பாக்கம் (Chennai News): சென்னையை அடுத்துள்ள கீழ்க்கட்டளை பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி, அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9-ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இவர், தனக்கு வயிற்றில் கட்டி இருப்பதாக அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அவரை எழும்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். AFG Vs UGA Highlights: ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி..! 58 ரன்களில் சுருண்ட உகாண்டா படுதோல்வி..!

அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே 9 மாத கர்ப்பிணியாக இருப்பதை கண்டறிந்தனர். இதனை கேட்டு, அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இதுகுறித்து மடிப்பாக்கம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில், இந்த சிறுமி வீட்டில் உள்ள குளியலறையில் குளிக்கும்போது, கீழ்க்கட்டளை பகுதியை சேர்ந்த நிதிஷ் (வயது 19), அஜய் (வயது 19) ஆகிய இருவரும் தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.

பின்னர், இந்த வீடியோவை காட்டி சிறுமியை மிரட்டி, அவரை பாலியல் பலாத்காரம் (Rape) செய்துள்ளனர். இதனால் சிறுமி கர்ப்பமடைந்துள்ளது தெரியவந்தது. இதுதொடர்பாக, சம்மந்தப்பட்ட நிதிஷ் மற்றும் அஜய் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

(The above story first appeared on LatestLY on Jun 04, 2024 11:38 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).