Vellore Sand Smuggling: மணல் கடத்தலை தட்டிக்கேட்டால் இப்படி கொடுமைப்படுத்துவதா? இளைஞரை நிர்வாணப்படுத்தி காவல்துறை அதிர்ச்சி செயல்.!
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பாலாற்றில் மணல் அள்ளுவதை தடுத்ததால் போலீசாரால் இளைஞர் தாக்கப்பட்டார்.
ஆகஸ்ட் 29, வேலூர் (Vellore News): வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பாலாற்றில் சட்ட விரோதமாக மணல் கடத்தப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டி வருகின்றனர். இதனால் ஆற்றில் பள்ளம் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் இளைஞர் ஒருவர் ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது பள்ளத்தில் மூழ்கி இறந்துள்ளார். இந்தநிலையில் மீண்டும் ஆற்றில் மணல் அள்ள லாரி ஒன்று அப்பகுதிக்கு வந்துள்ளது. Bomb Threat: ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்.. மாணவர்களுக்கு விடுமுறை..!
அப்போது ஆத்திரமடைந்த இளைஞர்கள், அவர்களை மணல் அள்ள விடாமல் லாரியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த காவல்துறையினர் போராட்டம் செய்த இளைஞர்களில் ஒருவரை அடித்து இழுத்து ஜீப்பில் ஏற்றி சென்றுள்ளனர். அதன்பிறகு காவல் நிலையத்தில் அந்த இளைஞரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
(The above story first appeared on LatestLY on Aug 29, 2024 02:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

