Viluppuram Murder: தாத்தா-பாட்டிக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த பேரன்.. தந்தைக்கு அதிர்ச்சி செய்தி சொல்லிய 19 வயது மகன்.!

சொந்த ஊரில் இருந்து தாத்தாவின் கிராமத்திற்கு சென்ற பேரன், தனது தாத்தா-பாட்டியை விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

Viluppuram Murder Case | Died Couple Visuals

ஏப்ரல் 19, பில்லூர் (Viluppuram News): விழுப்புரம் (Viluppuram) மாவட்டத்தில் உள்ள பில்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் கௌலு என்ற ஆறுமுகம். இவரின் மனைவி மணி. தம்பதிகளுக்கு 3 ஆண் & பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். தம்பதிகள் பிள்ளைகள் அனைவர்க்கும் திருமணம் முடிந்து குடும்பத்தோடு வசித்து வருகிறார்கள்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ரூட்டி, காடாம்புலியூர் பகுதியில் மூத்த மகன் முருகன் வசித்து வருகிறார். இவரின் மகன் அருள் சக்தி (வயது 19). இவர் நேற்று மாலை நேரத்தில் தனது தாத்தாவின் கிராமத்திற்கு மதுபோதையில் வந்துள்ளார். அங்கு உணவு மற்றும் குளிர்பானம் வாங்கி சென்றதாக தெரியவருகிறது.

அப்போது, குளிர்பானத்தில் விஷம் கலந்த சக்தி, அதனை வலுக்கட்டாயமாக தனது தாத்தா மற்றும் பாட்டி ஆகியோருக்கு கொடுத்து குடிக்கவும் வைத்துள்ளார். அதனைத்தொடர்ந்து, அங்கிருந்து அவர் தப்பி சென்றுவிட்டு, தனது தந்தைக்கு தொடர்பு கொண்டு உன் அம்மா-அப்பாவை கொலை செய்துவிட்டேன் என்று கூறியுள்ளார். Korean Vlogger: பெண் யூடியூபரிடம் ஆபாசமாக நடந்துகொண்ட இளைஞர் அதிரடி கைது; வைரலாக வீடியோவால் சர்ச்சை.!

இதனால் பதறிப்போன மூத்த மகன் முருகன், தனது உறவினர்களுக்கு தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்து தாய்-தந்தையை பார்க்கச்சொல்லி இருக்கிறார். அங்கிருந்தவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது ஆறுமுகம் மற்றும் மணி ஆகியோர் சடலமாக இருந்துள்ளனர்.

பின்னர் இதுகுறித்து விழுப்புரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பேரனை தேடி வருகின்றனர்.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement