Gingee Murder: மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சொந்த தம்பியை கொன்ற அண்ணன்; விழுப்புரத்தில் பரபரப்பு சம்பவம்.!

தனது மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடன் பிறந்த சகோதரனை கண்டித்தும் கேட்காததால், ஆத்திரமடைந்த அண்ணன் இறுதியில் தம்பியை கொலை செய்த சம்பவம் செஞ்சியில் நடந்துள்ளது.

Gingee Murder: மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சொந்த தம்பியை கொன்ற அண்ணன்; விழுப்புரத்தில் பரபரப்பு சம்பவம்.!
Rape and murder file pic(Photo Credit: Pixabay)

மே 11, செஞ்சி (Viluppuram News): விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி (Gingee, Viluppuram), ஜெயங்கொண்டான் சத்யா நகரில் வசித்து வருபவர் சீனிவாசன். இவரின் மகன்கள் மாரிமுத்து (வயது 35), வீரமுத்து (வயது 32). இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. வீரமுத்து லாரி ஓட்டுநராக பணியாற்றுகிறார். நேற்று இரவில் 09:30 மணியளவில் வீட்டிற்கு அவர் சென்றுகொண்டு இருந்தார்.

அப்போது அவரை இடைமறித்த மர்ம நபர்கள், கத்தியால் சரமாரியாக வெட்டி இறுகின்றனர். இந்த சம்பவத்தில் இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த வீரமுத்துவை மீட்ட அக்கம் பக்கத்தினர், அவரின் மனைக்கு தகவல் தெரிவித்துவிட்டு, அவசர ஊர்தி மூலமாக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். Kuno National Park: இனவிருத்தி சண்டையில் பெண் சிறுத்தையை கொன்ற ஆண் சிறுத்தை?.. தேசிய பூங்காவில் சம்பவம்.! 

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த செஞ்சி துணை காவல் கண்காணிப்பாளர் கவினா, காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி, உதவி ஆய்வாளர் சங்கர சுப்பிரமணியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், வீரமுத்து தனது அண்ணன் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த நிலையில், அதனை அவர் கண்டித்து ஓழுங்க இருக்கும்படி எச்சரித்துள்ளார். அதனை வீரமுத்து கேட்காது தனது செயல்களை தொடரவே, சம்பவத்தன்று ஆத்திரமடைந்த மாரிமுத்து சகோதரரரை கொலை செய்தது தெரியவந்தது. அவரிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.

(The above story first appeared on LatestLY on May 11, 2023 10:17 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).