Viluppuram Murder: போதைக்கு அடிமையான நண்பர்கள்; திருத்தும் முயற்சியில் ஈடுபட்ட சிறுவன் அடித்தே கொலை; 3 இளைஞர்கள் வெறிச்செயல்.!

போதைப்பொருளுக்கு அடிமையாகி, அதனை விற்பனை செய்யவும், பணம் தேவைப்பட்டால் திருடவும் ஆரம்பித்த நண்பனை திருத்தும் முயற்சியில் ஈடுபட்ட இளைஞர், இறுதியில் நண்பர்கள் கையாலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

Viluppuram Murder: போதைக்கு அடிமையான நண்பர்கள்; திருத்தும் முயற்சியில் ஈடுபட்ட சிறுவன் அடித்தே கொலை; 3 இளைஞர்கள் வெறிச்செயல்.!
Viluppuram Thiruvennainallur Minor Boy Ramachandran Killed Case | Accuse Visuals

ஏப்ரல் 07, திருவெண்ணெய்நல்லூர் (Viluppuram Crime News): விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் (Thiruvennainallur, Viluppuram), கொத்தனூர் கிராமத்தில் வசித்து வரும் சிறுவன் இராமச்சந்திரன் (வயது 17). இதே கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுவன், மோகன் ராஜ், கந்தசாமி, கஜேந்திரன் ஆகியோரும் நண்பர்கள் ஆவார்கள். இவர்களில் மோகன் ராஜ் மற்றும் கந்தசாமி போதைக்கு அடிமையானவர்கள்.

இவர்கள் போதைப்பொருள் விற்பனை செய்வது, போதைப்பொருள் வாங்க பணம் இல்லை என்றால் கண்களில் படும் பொருட்களை திருடி விற்பனை செய்வது போன்றவற்றில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் அவர்களின் மீது குற்ற வழக்குகளும் அவ்வப்போது பதிவாகி வந்துள்ளன.

இவர்களை திருத்தும் முயற்சியில் நண்பரான சிறுவன் இராமச்சந்திரன் ஈடுபட்டு இருந்த நிலையில், நண்பர்களிடம் திருட்டு மற்றும் போதைப்பொருள் குறித்து பல முறை கண்டித்தும் அப்பழக்கத்தை கைவிடவில்லை. இதனால் நண்பர்களிடம் இருந்து சிறுவன் இராமச்சந்திரன் விலகி சென்றுள்ளார். Baby Thief: இலாவகமாக வந்து பிஸ்கட்டை தூக்கி ஓடிய குழந்தை.. நெஞ்சடைத்துப்போன பணியாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!

கூடா சவகாசத்தில் இருந்து நண்பர்களை திருத்த முயற்சித்தும் பலனில்லை என்று கருதிய சிறுவன் இராமச்சந்திரன், நண்பர்களின் அழைப்பை ஏற்று பேசாமல் இருந்துள்ளார். இதனால் சிறுவன் இராமச்சந்திரன் மீது மோகன்ராஜ், கந்தசாமி ஆகியோர் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளனர்.

சம்பவத்தன்று வீட்டின் வாயிலில் உள்ள மரத்தில் சேலை தூளி கட்டி இராமச்சந்திரன் உறங்கிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, அங்கு சென்ற மோகன் ராஜ், கந்தசாமி மற்றும் 16 வயது சிறுவன் சேர்ந்து இராமச்சந்திரனை கொலை செய்து தப்பி சென்றுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் காவல் துறையினர் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், தலைமறைவான மோகன் ராஜ், கந்தசாமி மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். தவறான வழியில் சென்ற நண்பனை திருத்த முயற்சித்த இளைஞர் இறுதியில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

(The above story first appeared on LatestLY on Apr 07, 2023 10:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).