TN Weather Update: அடுத்த 7 நாட்களுக்கு வானிலை நிலவரம்... சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
வங்கக்கடல் & அரபிக்கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள், சூறைக்காற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கு என்பதால் வரும் 5 நாட்களுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 17, நுங்கம்பாக்கம் (Chennai News): தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி நாளைய வானிலை (Tomorrow Weather) அறிக்கை, சென்னை வானிலை (Weather) ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவுகின்றது. கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தமட்டில் நீலகிரி மாவட்டம் கூடலூர் பஜார், மேல் கூடலூர் பகுதிகளில் இரண்டு சென்டிமீட்டர் மழையும், ராணிப்பேட்டை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் ஒரு சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் மதுரை விமான நிலையத்தில் 40.3 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது, குறைந்தபட்சமாக ஈரோட்டில் 19.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
அதிக வெப்பத்தால் அசௌகரியம்:
அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை (Tamilnadu Weather Update) முன்னறிவிப்பை பொறுத்தமட்டில், மேற்கு திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக 17ஆம் தேதி முதல் 23ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடத்திலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் இரண்டு டிகிரி முதல் நான்கு டிகிரி வரை இயல்பை விட அதிகமாக இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை & ஈரப்பதம் காரணமாக ஒரு சில இடங்களில் அசௌகரியம் உண்டாகும். Delhi New CM Atishi: ராஜினாமா செய்யும் அரவிந்த் கெஜ்ரிவால்.. டெல்லியின் புதிய முதல்வர் ஆன அதிஷி..!
தலைநகரின் வானிலை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தமட்டில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்ப நிலையாக 39 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்சியசும் பதிவாகலாம்.
வங்கக்கடல் & அரபிக்கடல் மீனவர்களுக்கு எச்சரிக்கை:
மீனவர்களுக்கான எச்சரிக்கையாக மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதி, அதனை ஒட்டிய குமரிக்கடல் ஆகிய இடங்களில் 17ஆம் தேதி முதல் 21ம் தேதி வரை சூறாவளிக்காற்று வீசும். இடையிலேயே 55 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும். வங்கக்கடல் பகுதியில் 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை தெற்கு வங்கக்கடலில் சூறாவளிக்காற்று 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசலாம். அரபிக்கடல் பகுதியில் 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை தென்மேற்கு அரபிக் கடல், மத்திய மேற்கு அரபிக்கடல் ஆகிய இடங்களில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 கிலோமீட்டர் வேகம் முதல் 55 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும். இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசலாம் என்பதால் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது.
(The above story first appeared on LatestLY on Sep 17, 2024 03:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

