அக்டோபர் 27, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை பொறுத்தவரையில், தமிழகத்தில் பொதுவாக ஓரிரு இடங்களில் (தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்) மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால்
பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் இராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கடலூர், கோவை, திருநெல்வேலி, தேனி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருச்சி, மதுரை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் சென்னை நுங்கம்பாக்கம் & மீனம்பாக்கத்தில் 35.3 டிகிரி செல்ஸியஸ் அதிகபட்சமாகவும், ஈரோட்டில் 17.4 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் குறைந்தபட்சமாகவும் பதிவாகியுள்ளது.
இன்றைய வானிலை (Today Weather):
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையில், தென்னிந்திய கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. 27.10.2024 இன்று தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. Perambalur: ரூ.345 கோடி செலவில் நிறைவேறும் கொள்ளிடம் ஆறு கூட்டுக்குடிநீர் திட்டம்; பெரம்பலூர் மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி.!
நாளைய வானிலை (Tomorrow Weather):
28.10.2024 நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 29.10.2024 மற்றும் 30.10.2024 அன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 31.10.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை (Weather Update in Chennai):
01.11.2024 மற்றும் 02.11.2024 அன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பில், அடுத்த 24 மணி நேரத்ததிற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை (Today Fisherman Warning):
27.10.2024 இன்று குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
27.10.2024 இன்று கேரள கடலோரப்பகுதிகள், லட்சத்தீவின் தெற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.