TN Rain Prediction: தமிழ்நாட்டில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.. வானிலை ஆய்வாளர் தகவல்..!

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வாளர் மாஸ்ரைன்மேன் தெரிவித்துள்ளார்.

TN Rain Prediction: தமிழ்நாட்டில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.. வானிலை ஆய்வாளர் தகவல்..!
TN Rain Prediction (Photo Credit: @MasRainman X)

மே 9, சென்னை (Chennai): வானிலை ஆய்வாளர் மாஸ்ரைன்மேன் (Meteorologist MASRAINMAN) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேலும் தென் தமிழகம் மற்றும் உள் டெல்டா பகுதிகளில் பரவலாக மழை பெய்யும். வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி, தேனி, கம்பம், வால்பாறை ஊட்டி & கொடைக்கானலில் மிதமான/கனமழை பெய்யும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஓரளவு மேகமூட்டத்துடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். Nurses Day Quotes in Tamil: "செவிலியர் செய்வது தொழிலல்ல தொண்டு.." செவிலியர் தின வாழ்த்து கவிதைகள்..!

மேலும் கேரளாவில், இடுக்கி, பத்தனம்திட்டா, கொச்சி டிடி (நேரியமங்கலம், தொடுபுழா, மூவாட்டுபுழா), இடுக்கி மலபுரம், கோழிக்கோடு பகுதிகளில் மிதமான/கனமழை பெய்யும். கர்நாடகாவில் மலேநாடு, பெங்களூரு, சித்திரதுர்கா மாவட்டங்களில் பரவலாக மிதமான/கனமழை பெய்யும். ஆந்திராவில் ஹைதராபாத், விஜயவாடா மற்றும் ராயலசீமா பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

(The above story first appeared on LatestLY on May 09, 2024 10:53 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).