Apple iPhone 14 Plus Offer Sale: பிளிப்கார்ட்டில் அதிரடி சலுகையுடன் ஐபோன் 14 பிளஸ் ஸ்மார்ட்போன் விற்பனை..! முழு விவரம் உள்ளே..!
பிளிப்கார்ட்டில் ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் ஸ்மார்ட்போன், தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஜூன் 21, சென்னை (Technology News): ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 16 வருவதற்கு முன், ஐபோன் 14 பிளஸ் ஸ்மார்ட்போனை (iPhone 14 Plus Smart Phone) அதிரடி சலுகையுடன் வாங்க ஓர் அறிய வாய்ப்பு பிளிப்கார்ட்டில் உள்ளது. பிளிப்கார்ட் (Flipkart) தற்போது ஐபோன் 14 பிளஸ் மீது 22% தள்ளுபடி வழங்குகின்றது. இதன் மூலம், ரூ. 79,900 இருந்த விலை ரூபாய் 61,999 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட 19,901 ரூபாய் தள்ளுபடி அளிக்கிறது. Pleasure Travel At Budget Prices: பட்ஜெட் விலையில் இன்ப சுற்றுலா செல்ல வெறும் 5000 ரூபாய் போதும்..! மலைகளின் சின்ன இளவரசி காண..!
அதிரடி சலுகை:
HDFC வங்கி கிரெடிட் கார்டு அல்லது Flipkart Axis Bank கார்டு பயன்படுத்தி கூடுதல் தள்ளுபடியை பெறலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் நெட் பேங்கிங் மூலம் கட்டணம் செலுத்தி ரூ. 2,000 கூடுதல் தள்ளுபடி பெற முடியும். இந்த அனைத்து சலுகைகளையும் சேர்த்து, ஐபோன் 14 பிளஸ் ஸ்மார்ட்போனை வெறும் 59,999 ரூபாய்க்கு வாங்கலாம்.
ஐபோன் 14 பிளஸ் சிறப்பம்சங்கள்:
இந்த ஸ்மார்ட் போன், 6.7-அங்குல சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மேலும், மென்மையான செயல்பாட்டிற்கான சக்திவாய்ந்த A15 Bionic chip உள்ளது.
இதில், 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் வசதி உள்ளது. நீர்-எதிர்ப்பு வடிவமைப்பு IP68 தரம் கொடுக்கப்பட்டுள்ளது.
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்ய இரட்டை 12MP கேமரா அமைப்பு மற்றும் செல்பி மற்றும் வீடியோ கால்களுக்காக 12MP முன் கேமரா இணைக்கப்பட்டுள்ளது.
இதில், 4328mAh பேட்டரி திறன் கொண்ட 15W பாஸ்ட் சார்ஜிங் அம்சம் உள்ளது.
(The above story first appeared on LatestLY on Jun 21, 2024 02:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

