ASX Layoffs: பணியாளர்களை வேலையில் இருந்து நீக்க திட்டமிட்டு வரும் ஏஎஸ்எக்ஸ் நிறுவனம்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!

ஆஸ்திரேலிய பங்குச்சந்தை ஆப்பரேட்டர் நிறுவனம் அதன் ஊழியர்களில் சுமார் மூன்று சதவீதம் வரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ASX Layoffs: பணியாளர்களை வேலையில் இருந்து நீக்க திட்டமிட்டு வரும் ஏஎஸ்எக்ஸ் நிறுவனம்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!
ASX (Photo Credit: @Reuters X)

பிப்ரவரி 16, ஆஸ்திரேலியா (Australia): ஆஸ்திரேலிய பங்குச்சந்தை ஆப்பரேட்டர் நிறுவனமான ஏஎஸ்எக்ஸ் (ASX) நிறுவனம், தொடர்ந்து வருவாய் இழப்பீடுகளை சந்தித்து வருகிறது. கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக அதன் பங்குகள் சரிவிலேயே உள்ளன. இதனால் அந்த நிறுவனம் தனது ஊழியர்களில் சுமார் மூன்று சதவீதம் பேர் வரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் மூலம் நிறுவனம் மறுசீரமைப்பை செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. Jadeja Admits the Mistake: எஸ்.கான் ரன் அவுட்க்கு காரணம் நானே - தவறை ஒப்புக்கொண்ட ஜடேஜா; இன்ஸ்டாகிராமில் வருந்தி பதிவு.!

மேலும் நிறுவனத்தின் செலவுகள் கடந்த ஆண்டை விட தற்போது உயர்ந்துள்ளதாகவும், ஆனால் பங்குகளின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதாலும், நிறுவனம் சரிவினை கண்டு வருவதாக கூறப்படுகிறது.

(The above story first appeared on LatestLY on Feb 16, 2024 10:50 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).