Elon Musk Donate Revenue to Gaza: இஸ்ரேல் - காசா போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதிஉதவி: எக்ஸ் கார்ப்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் அறிவிப்பு.!
எக்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த மதிப்பு என்பது 44 பில்லியனை கடக்கும் என்று கூறப்படுகிறது. இதனை ஒட்டுமொத்தமாக பல முதலீடுகள் செய்து, வருமானத்தை இரட்டிப்பாக்கும் பணியில் எலான் மஸ்க் ஈடுபட்டு வருகிறார்.
நவம்பர் 22, கலிபோர்னியா (Technology News): அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா, நெவேடா மாகாணத்தில் தலைமையிடங்களை கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் எக்ஸ் கார்பொரேஷன் (X Corporation). இந்நிறுவனம் விண்வெளி ஆராய்ச்சி (Space X), செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ChatGPT , Open AI), மின்சார பயன்பாடு வாகனங்கள் (Tesla) தயாரிப்பு, தொலைத்தொடர்பு சேவை (Starlink) உட்பட பல தொழில்களை செய்து வருகிறது. இதன் உரிமையாளராக, உலக செல்வந்தர்களின் ஒருவராக எலான் மஸ்க் இருக்கிறார்.
எக்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த மதிப்பு என்பது 44 பில்லியனை கடக்கும் என்று கூறப்படுகிறது. இதனை ஒட்டுமொத்தமாக பல முதலீடுகள் செய்து, வருமானத்தை இரட்டிப்பாக்கும் பணியில் எலான் மஸ்க் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், தனது எக்ஸ் கார்ப்பரேஷன் அமைப்புக்கு வரும் விளம்பரங்களுக்கான தொகைகளை போரில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கவுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார். Delhi Shocker: குடும்ப பிரச்சனையில் பயங்கரம்: குழந்தைகளின் கழுத்தை அறுத்து, தந்தை தற்கொலை முயற்சி.. 2 வயது பிஞ்சு பரிதாப பலி.., 2 உயிர் ஊசல்.!
மத்திய கிழக்கில் உள்ள இஸ்ரேல் - காசா போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, தனது எக்ஸ் நிறுவனத்திற்கு வரும் விளம்பரம் மற்றும் சந்தா வருவாய்களை அங்குள்ள மக்களின் முன்னேற்றத்திற்காக தனமாக வழங்கவுள்ளேன் என்று அவர் கூறியுள்ளார். இதற்காக வரும் வருவாயை கணக்கிடும் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறார். தனது நிதிஉதவி பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்று சேருவதை தான் உறுதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
கடந்த அக்.07ம் தேதி இஸ்ரேல் நாட்டை எதிர்த்து பாலஸ்தீனியத்தின் ஹமாஸ் பயங்கரவாதிகள் போரை தொடங்கினாலும், முடிவில் பாலஸ்தீனியத்தை சேர்ந்த அப்பாவி பொதுமக்களே அதிகம் பாதிக்கப்பட்டனர். ஏற்றுக்கொள்ள இயலாத 1400 மரணங்களை ஏற்படுத்திய ஹமாஸ் பயங்கரவாதிகளால், அவர்களின் தரப்பு பொதுமக்கள் இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் இறக்கவேண்டிய சூழ்நிலை உண்டாகியது குறிப்பிடத்தக்கது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)