Big Discount On Apple iPhone 15: காதலர் தின சிறப்பு.. ஆப்பிள் ஐபோன் விலை குறைப்பு..!
காதலர் தினத்தை முன்னிட்டு ஆப்பிள் ஐபோன் 15 விலை குறைக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 05, புதுடெல்லி (New Delhi): ஐபோன் 15 (Apple iPhone), ஆரம்பத்தில் ரூ.79,900க்கு அறிமுகமானது. ஆனால் தற்போது ரூ.72,999க்கு மட்டுமே விற்பனை ஆகிறது. இருப்பினும் இந்த ஆப்பிள் ஐபோன் 15 வெளியானதில் இருந்து பல ஆன்லைன் விற்பனையில் அதன் விலை குறைந்துள்ளது. இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு ஐபோன்களின் விலையை பிளிப்கார்ட் தற்போது குறைத்துள்ளது. அதன்படி, ஐபோன் 15ஐ வெறும் 39,949 ரூபாய்க்கு வாங்கலாம். குறைந்த பணத்தில் ஐபோனைப் பெறுவதற்கான சிறந்த வாய்ப்புகளில் இதுவும் ஒன்றாகும். Garlic Price Hike: எகிறி அடிக்கும் பூண்டு விலை.. 1 கிலோ பூண்டு இவ்வளவு ரூபாயா?. மக்கள் பேரதிர்ச்சி..!
Apple iPhone 15 Flipkart இல் 72,999 ரூபாய்க்கு கிடைக்கிறது, ஆனால் வாடிக்கையாளர்கள் தங்கள் HDFC கார்டைப் பயன்படுத்தி வாங்குவதன் மூலம் 4000 ரூபாயைச் சேமிக்கலாம். மேலும், பிளிப்கார்ட் உங்கள் பழைய ஐபோன் 14 ஐ ரூ.33,505 வரை தள்ளுபடி செய்ய அனுமதிக்கிறது, இது ஆப்பிள் ஐபோன் 15 இன் விலையை ரூ.39,949 ஆக குறைக்கிறது.
(The above story first appeared on LatestLY on Feb 05, 2024 01:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

