Instagram Update: இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு குட்நியூஸ்.. நண்பரின் டைம்லைனில் புகைப்படம் பதிவிடும் வசதி விரைவில் அறிமுகம்.!

நாம் பின்தொடரும் நபருக்கு புகைப்படம் அனுப்ப விரும்பும், அவர்களின் Timeline-ல் புகைப்படத்தை பகிர புதிய அம்சம் விரைவில் இன்ஸ்டாகிராமில் கொண்டு வரப்படவுள்ளது.

Instagram (Photo Credit: Pixabay)

அக்டோபர் 30, புதுடெல்லி (Technology News): பேஸ்புக், வாட்சப், இன்ஸ்டாகிராம், திரெட்ஸ் போன்ற செயலிகள் மெட்டா நிறுவனத்தால் உலக அளவில் வழங்கப்பட்டு வருகிறது. இதில், இன்ஸ்டாகிராம் செயலியை மாதத்திற்கு 2.35 பில்லியன் பயனர்கள் உபயோகம் செய்கின்றனர்.

சர்வதேச அளவில் இன்ஸ்டாகிராம் நங்கவது மிக முக்கிய சமூக வலைதள பயன்பாட்டில் இடம்பெற்றுள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில், சேவை மேம்பாடு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவை பயனருக்கு அறிமுகம் செய்யப்படும்.

இந்நிலையில், தற்போது பயனர்கள் தங்களுக்கு பிடிக்கும் நபர்களை அல்லது பாலோ செய்யும் நபர்களை டேக் செய்யும் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், புகைப்படம் பதிவு செய்யும் வசதியும் அடுத்தபடியாக அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனத்தின் தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Divorce within 12 Hours after Marriage: திருமண பந்தியில் கலவரம்; திருமணமான 12 மணிநேரத்திரத்தில் கணவரை விவாகரத்து செய்த இளம்பெண்.! 

நாம் பின்தொடரும் நபருக்கு புகைப்படம் அனுப்ப விரும்பும், அவர்களின் Timeline-ல் புகைப்படத்தை பகிர புதிய அம்சம் கொண்டுவரப்படவுள்ளது. சம்பந்தப்பட்ட நபர் அனுமதி வழங்கிய பின்னர், அந்த பதிவு அவரின் பதிவில் இடம் பெறும் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஆடம் உறுதி செய்துள்ளார். இந்த சேவையானது தற்போது முதற்கட்டத்தில் இருக்கும் நிலையில், விரைவில் இது பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பேஸ்புக்கில் நமது நண்பர்கள் பிறந்தநாள் வாழ்த்து சொல்வது, நமது Timeline-ல் இடம்பெறும். அதேபோல, புகைப்படங்களை பதிவிடும் வசதி இன்ஸ்டாகிராமில் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.